ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் சென்ற உதவி பேராசிரியர், ஏற்கெனவே இயந்திர த்தில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை வங்கியில் ஒப்படைத் துள்ளார். பேராசிரி யரின் இந்த நேர்மை யான செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை யில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரிய ராக பணியாற்றி வருபவர் செந்தில் வேலன். இவர் மாலை நேரத்தில் திறந்த வெளி உணவகத்தில் பணி யாற்றியும் வருகிறார்.
கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது அந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் செந்தில் வேலன் பணம் எடுப்பதற்கு முன் வந்த ஒருவர் அட்டையை நுழைத்து விட்டு பணம் வரவில்லை என்று சென்று விட்டார்.
இந்நிலையில் அதே ஏ.டி.எம். இயந்திரத்தில் 10 ஆயிரம் ரூபாய் இருந்ததைக் கண்டு செந்தில் வேலன் வியப் படைந்தார். அப்போது ஏ.டி.எம் மையத்தில் பாதுகாவலர் இல்லாததால், தனது நண்பரின் ஆலோசனை யின் பேரில், காவல் ஆய்வாளர்
ரமேஷ்குமார் முன்னிலையில் வங்கி மேலாளர் ஹரிதரனிடம் அந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்தார்.
இதனைதொடந்து காவல்துறை விசாரணையில், செந்தில் வேலன் ஏ.டி.எம். மையத்தில் நுழைந்த போது 10 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக கூறப்படுகிறது.
10 ஆயிரம் ரூபாய் பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த செந்தில் வேலனின் செயலை காவல் துறையினர், வங்கி அதிகாரிகள் மட்டு மல்லாமல், பொது மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Thanks for Your Comments