பிளாஸ்டிக் தடையால் சிறையில் துணிப்பை தயாரித்து விற்கும் கைதிகள் !

0
தமிழக அரசின் பிளாஸ்டிக் தடைக்கு கை கொடுக்கும் வகையில், திருச்சி சிறைவாசிகள் துணிப்பை தயாரித்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்யத் துவங்கி யுள்ளனர்.


தமிழகத்தில் ஜனவரி, 1ம் தேதி முதல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பைகள், குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், சாப்பிடும் தட்டுகள் உள்ளிட்டவை களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

எனவே பிளாஸ்டிக் காலான குறிப்பிட்ட இந்த பொருட்களை, இனி பயன்படுத்த முடியாது. இதை யடுத்து, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, துணிப்பையை பயன்  படுத்தும் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரமாக நடத்தப் பட்டது.

தமிழகத்தில், புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் தடையை ஊக்கப் படுத்தும் வகையில், துணிப்பை தயாரித்து விற்பனை செய்யும் பணியில், திருச்சி மத்திய சிறைவாசிகள் இறங்கி யுள்ளனர்.

இதற்காக, ஐந்து ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் தினமும், 100 முதல், 150 துணிப் பைகள் தயாரிக்கும் பணியை துவக்கி யுள்ளனர். 

புத்தாண்டு அன்று மட்டும், 500 துணிப் பைகள் தயாரிக்கப்பட்டு, சிறை வாசலில் உள்ள, பிரிசன் பஜாரில் விற்பனைக்கு வந்துள்ளது.

இது குறித்து, திருச்சி மத்திய சிறை, டி.ஐ.ஜி., சண்முக சுந்தரம் கூறியதாவது: 

திருச்சி மத்திய சிறையில், சிறை வாசிகளால், தயாரிக் கப்படும் துணிப் பைகள், சிறை வாசலில் உள்ள அங்காடியில் விற்பனைக்கு வந்துள்ளது. 

அரசின் பிளாஸ்டிக் தடைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், இந்த பணியில் சிறைவாசிகள் தீவிரமாகி யுள்ளனர். இதில், காட்டன் துணியில் பைகள் தைக்கப் படுவதால், அவை உறுதியாக இருக்கும். 


இதில் வருமானத்தை விட, சேவை நோக்கமே அதிகம் என்பதால், ஒரு பை, 10 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. குறிப்பிட்ட தொகை சிறைவாசி களுக்கு சம்பளமாக வழங்கப் படுகிறது. 

ஆர்டர்கள் மற்றும் தேவைகளைப் பொறுத்து, ஒரு நாளைக்கு, 1,000 துணிப்பை தைக்கவும் திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பாதித்தவர் களுக்கு உழைக்கும் சிறை வாசிகள்:

துணிப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறை வாசிகள் அனைவரும், கொலை வழக்கில் தொடர்புடைய ஆயுள் தண்டனை பெற்றவர்கள். 

இவர்கள் பைகள் தைப்பதில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை, இந்த சிறைவாசிக ளால் பாதிக்கப்பட்ட, குடும்பங் களுக்கு நிவாரணமாக வழங்க வுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings