நிலாவில் செல்பி அல்லது புகைப்படம் எடுக்கும் போது நட்சத்திரங்கள் தெரிவ தில்லை. வெறும் கண்களால் பார்க்கும் போது நட்சத்திரங்கள் மங்களாகவே தெரியும்.
நீல் ஆம்ஸ்ட்ராங் எப்பொழுது நிலாவில் காலடி எடுத்து வைத்தாரோ அன்று முதலே, ஒரு சர்ச்சை நீடித்து வருகின்றது. அதாவது நிலாவிற்கு மனிதன் சென்றது கட்டுக்கதை என்று.
20-7-1969ம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் என்ற இரண்டு விண்வெளி ஆராய்ச்சி யாளர்கள் அப்பல்லோ 2 விண்கலத்தின் மூலம் நிலாவிற்கு சென்றனர்.
அப்பல்லோ நிலவில் களம் இறங்கியதும் நீல் ஆம்ஸ்டராங், ஆல்டிரின் அடுத்தடுத்து கால் பதித்தனர். அடுத்து புகைப் படங்கள் எடுத்துக் கொண்டனர். அப்புகைப் படத்தில் நட்சத்திரங்கள் தெரிய வில்லை.
நட்சத்திரங்கள் தெரியாததால், நாசா போலியான புகைப் படத்தை வெளியிட்டு ஏமாற்றி யுள்ளது என அப்போது குற்றச்சாட்டு வைக்கப் பட்டது.
நிலவில் வெறும் கண்களால் நட்சத்திர ங்களை பார்க்கும்போது, பூமியை விட சற்று மங்களாகவே தெரியும். நிலவில் உள்ள வளிமண்டலம் வலிமை இல்லாததே இதற்கு காரணம்.
பூமியை போன்ற வலிமையான காற்று மண்டலம் நிலவில் இல்லை. காற்று மண்டலம் வலியமையாக இருந்தால் மட்டுமே ஒளியை சிதறடிக்க முடியும்.
காற்றில், ஒளி சிதறுவதின் மூலமே நட்சத்திரங்கள் நன்கு வெளிச்சமாக நம் கண்களுக்கு புலப்படு கின்றன.
நிலவின் வலிமையில்லா காற்று மண்டலம் காரணமாக, கேமராவின் லென்சுகளுக்கு நட்சத்திரம் புலப்படாது.
பூமியில் உங்கள் மொபைல் மூலம் நட்சத்திரத்தை செல்பி அல்லது புகைப்படம் எடுத்தால் கூட நட்சத்திரம் தெரியாது. பூமியில் இருந்தே தெரியாதபோது, நிலவில் மட்டும் எப்படி தெரியும்.
மேலும்
நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றி எடுத்த பர்ஸ்ட் மேன் என்ற திரைப்படத்தில் கூட அதன் காரண மாகவே நட்சத்திரங்களை காட்டவில்லை.
Thanks for Your Comments