கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் எப்போது நடவடிக்கை? - ஸ்டாலின் கேள்வி

0
அப்பாவி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்ப ட்ட விவகாரத்தில் உயர் அதிகாரிகள் மீது தமிழக அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பினார்.


தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் கடந்த 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (சனிக்கிழமை) திமுக தலைவரும், எதிர்க் கட்சித் தலைவரு மான மு.க. ஸ்டாலின் தமிழக சட்டப் பேரவையில் ஆற்றிய உரையின் விவரம்:

"சாத்தூர் அரசு மருத்துவமனையிலேயே ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி. தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை அரங்கேறி இருக்கிறது. 

இந்த விவகாரத்தில் அந்த ரத்தத்தை கொடுத்தவர் தற்கொலை செய்து கொண்டிருக் கிறார். இந்த விவகாரத்தில், விலைமதிக்க முடியாத ஒரு உயிர் பிரிந்திருக் கின்றது. ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கை கேள்விக் குறியாகி இருக்கின்றது.

இதற்குக் காரண மானவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திருப்ப தாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப் பேரவையில் சொல்லி யிருக்கிறார். 

ஆனால், நான் கேள்விப்பட்ட வரையில் கீழ்மட்டத்தில் இருக்கக் கூடிய ஊழியர்கள் மீது தான் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்கிறது. 

அதிலும், சில பேர் அப்பாவிகள் இருக்கின் றார்கள். ஆனால், இதில் உயர் அதிகாரிகளும் சம்பந்தப் பட்டிருக்கி றார்கள். 

அவர்களும் இதற்குக் காரணமாக இருந்திருக் கின்றார்கள். அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?" என ஸ்டாலின் கேள்வி யெழுப்பினார்.

மேலும், "இந்தப் பிரச்சினை குறித்து விசாரிப்பதற்கு ஒரு கமிட்டி போடப்பட்டி ருப்பதாக அமைச்சர் சொல்கிறார். கமிட்டி போடுவ தென்பது, கிணத்திலே கல்லைப் போடுவதற்கு ஒப்பாக சொல்லுவது உண்டு. இது அரசினுடைய நிலையைப் பொறுத்து சொல்லுவது. 


எனவே, இது ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கின்ற காரணத்தால் ஒரு நாளைக் குறிப்பிட்டு இத்தனை நாட்களு க்குள் என ஒரு கால எல்லையை நிர்ணயித்தால் தான் ஒரு முறையான தீர்ப்பு கிடைக்கும்" என ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை யடுத்து, சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு, பேரவை வளாகத்தில் அவை நடவடிக்கை களை காண வந்த கோயம் புத்தூர் இன்ஃபன்ட் ஜீசஸ் பள்ளி மாணவ, மாணவிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings