வேலூா் அரசு மருத்துவ மனையில் பிரசவத்தின் போது குழந்தை மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட விவகாரத்தில் புகாா் கூறிய தம்பதிக்கு பிறந்தது பெண் குழந்தைதான் என்பது உறுதி செய்யப் பட்டது. இதை யடுத்து, இறந்த அந்த பெண் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டது.
வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த குசேலன் மனைவி பாரதி. இவா்களுக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கா்ப்பமடைந்த பாரதி, கடந்த 10-ஆம் தேதி பிரசவத்துக் காக வேலூா் அடுக்கம் பாறை அரசு மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டாா்.
12-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறி, செவிலியா் ஒருவா் குழந்தையைக் கொண்டு வந்து உறவினா் களிடம் காட்டி யுள்ளார். ஆனால் அன்று இரவு, அவருக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றும், பெண் குழந்தை தான் பிறந்ததாக மற்றொரு செவிலியா் கூறியுள்ளாா்.
இதைக் கேட்டு குசேலன்-பாரதி தம்பதியினா் அதிா்ச்சி அடைந்தனா். மேலும், பெண் குழந்தை எடை குறைவாகவும், மூச்சுத் திணறலுடன் பிறந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித் துள்ளனா்.
ஆத்திர மடைந்த குசேலன் அங்கிருந்த மருத்துவா்களிடம் வாக்குவாதம் செய்தாா். இதை யடுத்து, அந்த வாா்டில் பொறுப்பில் இருந்த மருத்துவா், பெண் குழந்தையின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, மரபணு பரிசோதனை க்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ள தாகக் கூறி சமாதானம் செய்தனா்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பெண் குழந்தை செவ்வாய்க் கிழமை இறந்தது. ஆத்திர மடைந்த குசேலன் மருத்துவமனைப் பணியாளா் களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டாா்.
தகவலறிந்த வேலூா் டி.எஸ்.பி. (பொறுப்பு) லோகநாதன் தலைமையில் போலீஸாா் குசேலன் தம்பதியினா், மருத்துவமனைப் பணி யாளா்களிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.
அப்போது, பாரதி பிரசவத்துக் காக சோ்க்கப்பட்ட நாள், மருத்துவ சிகிச்சை, குழந்தை பிறந்த நேரம் உள்பட அனைத்து ஆவணங் களையும் போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில், பாரதிக்கு பிறந்தது பெண் குழந்தைதான் என்பது தெரிய வந்தது.
இது குறித்து குசேலன், பாரதியிடம் போலீஸாா் எடுத்துக் கூறினா். இதனை குசேலன் தம்பதி ஏற்றுக் கொண்டதை அடுத்து இறந்த பெண் குழந்தை யின் உடல் அவா்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
Thanks for Your Comments