திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக சென்னை அம்பத்தூரில் ஆளில்லாத இன்ஜினீயர் வீட்டில் திருடச் சென்ற திருடன் கிணற்றில் இறங்கி, 23 மணி நேரத்து க்குப் பிறகு போலீஸாரிடமே சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை அம்பத்தூர் இந்தியன் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இன்ஜினீ யராக இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
புத்தாண்டை யொட்டி சொந்த ஊரான தஞ்சாவூரு க்குக் குடும்பத்தி னருடன் விஜயகுமார் சென்றார். வீடு பூட்டிக் கிடப்பதைப் பார்த்த 3 கொள்ளை யர்கள் கொள்ளை யடிக்கத் திட்ட மிட்டனர்.
கடந்த 30-ம் தேதி இரவு 11 மணியளவில் கொள்ளை யர்கள் வீட்டுக்குள் பூட்டை உடைத்து நுழைந்தனர். பூட்டு உடைக்கும் சத்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் அம்பத்தூர் போலீஸாரு க்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனால் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அதில் 2 பேர் வேறுவழியாக தப்பி விட்டனர்.
ஒரு கொள்ளையன் மட்டும் இந்தியன் பேங்க் காலனியின் அருகில் உள்ள சந்திர சேகரபுரம் 3வது தெருவுக்குள் ஓடினார். போலீஸார் அவனை விரட்டினர். போலீஸூக்கு பயந்து அந்தப் பகுதியில் உள்ள கிணற்று க்குள் இருந்த குழாய் வழியாக கொள்ளையன் இறங்கினான்.
இரவு நேரம் என்பதால் கொள்ளை யர்கள் எங்கு சென்றார்கள் என்பதை போலீஸாரால் கண்டுபிடிக்க முடிய வில்லை. சந்திரசேகர புரத்துக்கு வந்த கொள்ளையனை நீண்ட நேரமாக தேடிய போலீஸார், அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
வீட்டின் உரிமையாளர் விஜய குமாருக்கு கொள்ளை சம்பவம் குறித்து போனில் தகவல் தெரிவிக்கப் பட்டது. உடனடியாக அவர் தஞ்சாவூரி லிருந்து அம்பத்தூரு க்கு வந்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த 10,000 ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்து அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சூழ்நிலையில் கடந்த 31-ம் தேதி காலை 11 மணியளவில் சந்திர சேகரபுரம் 3வது தெருவில் உள்ள கிணற்றி லிருந்து `காப்பாற்றுங்கள்' என்ற ஆண் குரல் கேட்டது.
அதைக் கேட்ட வீட்டின் உரிமையாளர் கோபால கிருஷ்ணன், கிணற்றுப் பகுதிக்குச் சென்று பார்த்தார். அப்போது கிணற்றுக்குள் தண்ணீரில் நீந்தியபடி ஒருவர் தத்தளித்துக் கொண் டிருந்தார். உடனடியாக தீயணைப்பு நிலையத் துக்கும் அம்பத்தூர் போலீஸாரு க்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.
தீயணைப்பு வீரர்களும் போலீஸாரும் பொது மக்களும் சேர்ந்து கிணற்றில் விழுந்த வரை உயிருடன் காப்பாற்றினர். அவரிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார் கூறுகையில்,``விஜயகுமார் வீட்டில் கொள்ளை யடித்த கொள்ளை யர்களில் ஒருவன்தான் எங்களிட மிருந்து தப்பிக்க கிணற்று க்குள் இருந்த குழாய் வழியாக இறங்கி யுள்ளார். கிணற்றின் ஆழம் 60 அடி. அதில் 5 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
இதனால் 55 அடி ஆழத்தி லிருந்து பைப் வழியாக ஏற முயற்சித்த திருடனால் மேலே ஏறி வரமுடிய வில்லை. இரவு முழுவதும் ஏற முயன்ற திருடன், மீண்டும் மீண்டும் கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சோர்வடைந்த அவனால் வெளியில் வர முடியாமல் தண்ணீருக்குள் தத்தளித் துள்ளார். இதனால் தான் காப்பாற்றுங்கள் என்று நீண்ட நேரம் சத்தம் போட்டுள்ளார்.
அவரின் சத்தம் கேட்டு அவரை 23 மணி நேரத்துக்குப் பிறகு மீட்டுள்ளோம். அவரின் பெயர் ஜெய்சிங், (44), வண்ணாரப் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 22 வழக்குகள் உள்ளன.
இவரின் கூட்டாளிகளான கமல், சுரேஷ் ஆகியோரைத் தேடிவருகிறோம். இன்ஜினீயர் விஜயகுமார் வீட்டில் கொள்ளை யடித்த பணம் ஜெய்சிங்கிடம் இல்லை. இதனால் அவரின் கூட்டாளி களைத் தேடி வருகிறோம்" என்றனர்.
கிணற்றுக்குள் இருந்த குழாய் வழியாக இறங்கிய கொள்ளையன் ஜெய்சிங்குக்கு இருட்டில் கிணற்றின் ஆழம் சரியாகத் தெரிய வில்லை. இதனால், இரவு முழுவதும் கிணற்று க்குள் தண்ணீரில் தத்தளித்த ஜெய்சிங், காலையில் தான் ஆழத்தைப் பார்த்து அதிர்ச்சி யடைந்துள்ளார்.
அதன்பிறகும் எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்ற பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால், ஜெய்சிங்கின் உடல் எடை அதிகம் என்பதால் அவரால் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் ஏற முடிய வில்லை. பைக் வழியாக ஏற முயன்ற ஜெய்சிங் பல தடவை கீழே விழுந்துள்ளார்.
கயிறு மூலம் தீயணைப்பு வீரர்கள் ஜெயசிங்கை வெளியில் தூக்கியதும் அவன் திருடன் என்ற தகவலைக் கேட்ட போலீஸாரும் பொது மக்களும் அதிர்ச்சி யடைந்தனர். இதையடுத்து ஜெயசிங்கை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
மேலும்
போலீஸாரிட மிருந்து தப்பிக்க கிணற்றுக்குள் இறங்கிய திருடன் மீண்டும் போலீஸாரிடம் சிக்கிய சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments