அமெரிக்க அதிபர் தேர்தலில், அந்நாட்டைச் சேர்ந்த முதல் இந்து எம்.பி.யான துளசி கபார்ட் போட்டியிடுகிறார்.அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஆண்டு நடைபெற உள்ளது.
இதில், போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பே தங்களை அறிவித்துக் கொண்டு, நிதி திரட்டும் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார்கள். இதில் அதிக நிதி மற்றும் பொதுமக்கள் ஆதரவை பெறும் வேட்பாளர்கள் தான் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.
இந்த வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்பி கமலா ஹாரீஸ், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்ளிட்டோர் தங்கள் விருப்பத்தை தெரிவித் துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி.யான துளசி கபார்ட்டும் (37), அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித் துள்ளார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் அவர் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
இந்துவாக இருந்தாலும், துளசி கபார்ட் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல. எனினும், அமெரிக்காவின் ஹவாய் தீவில் வசிக்கும் இந்து குடும்பத்தில் பிறந்தவர். அவர் எம்.பி.யாக பதவியேற்கும் போது கூட, பகவத் கீதை புத்தகத்தில் கை வைத்து தான் பதவி ஏற்றார்.
துளசி கபார்ட்டை பொருத்த வரையில், இந்தியாவுக்கு ஆதரவானவர். இதனால் அவர் அதிபர் பதவிக்கு போட்டி யிட்டால், இந்தியர்கள் வாக்குகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.
Thanks for Your Comments