யார் அவரு, அவரை பாக்கணு போல இருக்கே" என்று தமிழக மக்களை சொல்ல வைத்துள்ளார் அந்த போலீஸ்.
போலீசை கண்டித்து மறியல் நடக்கும், போலீசுக்கு ஆதரவு தெரிவித்து மறியல் நடக்குமா? அது தான் இந்த செய்தியின் ஸ்பெஷலே!
கும்பகோணம் அருகே உள்ள திருநீலக்குடி போலீஸ் ஸ்டேஷன் சப் - இன்ஸ்பெக்டர் அருள்குமார். வயது 30 தான் ஆகிறது.
மணல் கொள்ளை
இந்த ஊருக்கு இவர் சப் -இன்ஸ்பெக்ட ராக வந்ததில் இருந்தே எல்லாத்திலும் அதிரடி தான்.
குறிப்பாக மணல் கொள்ளை, சாராயம் கடத்தல் போன்ற வற்றை தீவிரமாக கண்காணித்து எதிரிகளை மிரள வைத்தார்.
இதில் பெருமளவு காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் புதுச்சேரி மாநில மது வகைகளை கட்டுப் படுத்தியது தான் அதிகம்.
டிரான்ஸ்பர்
இவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து கிரிமினல்கள் எல்லாம் மிரண்டே போய் விட்டனர். எதிரிகளுக்கு நடுக்கதை ஏற்படுத்தி இவர் மீது பொது மக்களுக்கு தனி மரியாதை ஏற்பட ஆரம்பித்தது.
இந்த சின்ன வயசில் இப்படி திறமையாக வேலை பார்க்கிறாரே என்று மக்கள் அருள் குமாரை வாயார புகழ்ந்தனர்.
எதிரிகளின் வாழ்வில் மண்ணை போட்டதால், அருள் குமாருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்து சேர்ந்தது.
போஸ்டர்கள்
பேராவூரணி க்கு பணிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதற் கான உத்தரவு வந்தது. இதை கேட்டு, திருநீலக்குடி மட்டுமல்லாமல், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் எல்லோருமே ஷாக் ஆனார்கள்.
இதற்கு என்ன செய்வது, எப்படி தடுத்து நிறுத்துவது என மக்களுக்கு புரியவில்லை. அதனால் பணிமாறுதல் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை தயார் செய்து ஊரெல்லாம் ஒட்டினார்கள்.
திரண்ட மக்கள்
இந்த தகவல் மட்டும் அரசுக்கு போய் சேராது என்று நினைத்து, கும்பகோணம் - காரைக்கால் சாலையில் அந்தமங்கலம் என்ற இடத்தில் சாலை மறியலை ஆரம்பித்து விட்டார்கள்.
இதற்காக சுற்று வட்டார மக்கள் எல்லோருமே திரண்டனர். விஷயம் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு போனது.
அருள்தான் வேண்டும்
விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதே ஊரில் அருள்குமார் சப் -இன்ஸ்பெக்டராக இருக்க வேண்டும், அவரை மாற்ற விட மாட்டோம் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டார்கள்.
நம்பிக்கை
ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணமாகதான் அவரை மாற்ற வேண்டியதாக போயிற்று என்று போலீஸ் தரப்பில் மக்களிடம் நீண்ட நேரம் விளக்கம் அளிக்கப் பட்டது.
இதனால் ஓரளவுதான் மக்கள் மனம் மாறினார்கள். எனினும், 11 மாதமாக தான் இங்கு அருள்குமார் பணியாற்றினாலும்,
ஊர் மக்கள் இவ்வளவு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ளதை அறிந்து மற்ற போலீசாரே ஆச்சரியப் பட்டார்கள்.
மேலும்
Thanks for Your Comments