சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டியில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8.48 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிக ளாக பதிவானதா கவும், பூமிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந் ததாகவும் சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.
சுமார் 10 வினாடிகள் நீடித்த நிலநடுக்க த்தின் போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள், வணிக வளாகங் களில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
பின்னர் அவர்கள் வீதிகளிலும், திறந்த வெளி மைதானங் களிலும் தஞ்சம் அடைந்தனர். டோங்கே என்கிற கிராமத்தில் நிலநடுக்க த்தால் ஏராளமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்தன.
அதே சமயம் இந்த நிலநடுக்க த்தால் உயிர் இழப்போ அல்லது யாரும் காயம் அடைந்த தாகவோ தகவல்கள் இல்லை.
Thanks for Your Comments