சிறுமி ஹரிணியை மீட்க கை கொடுத்த லதா ரஜினி !

3 minute read
0
காஞ்சிபுரம் சிறுமி ஹரிணி கடத்தப்பட்ட விவகாரம் பற்றி தமிழகத்தில் பலருக்கும் தெரியும். அந்தக் குழந்தை பற்றிய செய்தியைப் பதிவிட்டாலே, அவள் கிடைத்து விட்டாளா எனத் தெரிந்து கொள்ள ஒரு கூட்டமே தமிழகத்தில் இருக்கிறது. 
அவர்களுக்கு இன்று ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. 115 நாள்களு க்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் காணாமல் போன சிறுமி ஹரிணி கிடைத்து விட்டாள். ஹரிணி எப்போது எப்படிக் காணாமல் போனாள், தற்போது எப்படி மீட்கப் பட்டாள் என்பதைப் பார்ப்போம்.

ஹரிணி

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே உள்ள மானாமதி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். நாடோடி இனத்தைச் சேர்ந்த இவர், கடந்த மூன்று ஆண்டு களுக்கு முன்பு, காளியம்மாள் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


இவர்களுக்கு இரண்டு வயதுடைய ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள், மூன்று சக்கர வாகனத்தின் மூலம் ஊர் ஊராகச் சென்று பொம்மைகள், வளையல்கள் உள்ளிட்ட ஃபேன்சி பொருள்களை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள். 

இவர்கள், மூன்று மாதங்களுக்கு முன்பு அணைக்கட்டுப் பகுதிக்கு வந்த போது, இரவு அந்த வாகனத்தின் முன்விளக்கு பழுது அடைந்து விட்டது. இதனால், அருகில் உள்ள அணைக்கட்டு காவல் நிலையம் அருகே, உதவி காவல் ஆய்வாளர் ஒருவரின் வீட்டின் முன்பு படுத்து உறங்கி யிருக்கிறார்கள். 
இரவு 11 மணிக்கு கொசு வலை விரித்து ஹரிணியைத் தூங்க வைத்திருக்கி றார்கள். சில நிமிடங்கள் கழித்து பார்த்த போது, ஹரிணி காணாமல் போனது தெரியவந்தது.

அணைக்கட்டு காவல் நிலையம் அருகே, உதவி காவல் ஆய்வாளர் ஒருவரின் வீட்டின் முன்பு படுத்து உறங்கிக் கொண்டிருந்த நாடோடி இன தம்பதியரின் குழந்தை ஹரிணி காணாமல் போனதாக, அணைக்கட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது.

வெங்கடேசன் - காளியம்மாள்

‘என் புள்ளை காணாமல் போய் ஒரு வாரம் ஆகுது. இதுவரைக்கும் அவளப்பத்தி எந்தத் தகவலும் இல்லை. எங்களுக்கு நம்பிக்கை இருக்கு, எம்புள்ள கண்டிப்பா கிடைச்சுருவா. 
ஹரிணி எங்ககிட்ட வந்து சேர்ற வரை நாங்க இந்த போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயே தான் கெடப்போம். இங்க இருந்து ஒரு அடிகூட நகர மாட்டோம். 

ஒருவேள எங்க புள்ள எங்ககிட்ட வந்து சேரலன்னா இங்கேயே எங்க உசுர விட்டுருவோம்' என காவல் நிலைய வாசலிலேயே ஹரிணியின் பெற்றோர் கதறினர்.

"ஹரிணியைக் கண்டு பிடிப்பவர் களுக்கு ஒரு லட்சம் பரிசு!" என்று அறிவித்து, ஹரிணியின் பெற்றோருக்கு தெம்பூட்டினர் கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' அமைப்பினர். 

அவர்கள் வெறும் அறிவிப்போடு நின்று விடாமல், சிறுமியைத் தேடும் பணியில் தங்களால் முடிந்த அனைத்து உதவி களையும் செய்தனர்.

பரிசுத் தொகை

ஹரிணி பற்றி தகவல்களை உள்ளடக்கிய நோட்டீஸ் களை ஆயிரக் கணக்கில் அச்சடித்து விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், காஞ்சிபுரம், சென்னை, கரூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரிடம் நேரடியாக சென்று இணைந்த கைகள் அமைப்பினர் விநியோகித்தனர். 

இதே நாளில் தான் யாரோ ஒருவர் இணைந்த கைகள் அமைப்பின ருக்குப் போன் செய்து ஹரிணி கிடைத்து விட்டாள் எனக் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர் களை இரண்டு மணி நேரமாக அலைக் கழிக்க விட்டனர்.

காஞ்சிபுரத் தில் காணாமல் போன சிறுமி ஹரிணி கொல்கத்தா வில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து காஞ்சிபுரம் காவல் துறையினர் சிறுமியின் தந்தையுடன் கொல்கத்தா விரைந்தனர். 

அதன் பின் நடந்த விசாரணையில் அங்குக் கிடைத்த குழந்தை ஹரிணி இல்லை என அடையாளம் காணப்பட்டது. 

கோவையில் ராஜம் என்ற பெயரில் மூன்று பேருந்துகளை இயக்கும் டிரான்ஸ்போர்ட் முதலாளி அருண் என்பவர், `ஹரிணியைக் கண்டுபிடித்து தருபவர்கள் எங்கள் பேருந்துகளில் 5 வருடங்கள் இலவசமாகப் பயணிக்க லாம்’ என்று அதிரடியாக அறிவித்தார். 


இப்படி பலரும் ஹரிணியைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளை யும் செய்தனர். மேலும் தர்மபுரி பேருந்து நிலையத்தில் ஹரிணியை பார்த்தோம் என ஒரே நேரத்தில் மூன்று போன்கால் காவலர்களுக்கு வந்தது. பேருந்து நிலையத்தில் நடந்த சோதனையும் ஹரிணி கிடைக்க வில்லை.

வெங்கடேசன் - காளியம்மாள்

ஹரிணி காணாமல் போன பிறகு சரியாகச் சாப்பிடாமல் பரிதவித்து வந்தார் ஹரிணியின் தாயும் கர்ப்பிணி யுமான காளியம்மாள். பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசமான தால் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது.
‘ஹரிணி காணாமல் போய் இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. எங்களால் சாப்பிட முடியவில்லை, தூங்க முடிய வில்லை, வேலைக்குக் கூட போக முடிய வில்லை. எப்போதும் குழந்தை நினைவாக இருக்கிறது. 
பலர் எங்களு க்குப் போன் செய்து குழந்தை கிடைத்து விடும் என ஆறுதல் கூறுகிறார்கள். கனடாவை சேர்ந்த ஒரு பெண் காளியம்மாள் மருத்துவ செலவுக் காக பணம் அனுப்பினார். 

ஹரிணி கிடைக்க லன்னா, அணைக்கட்டு காவல் நிலையம் முன்பு ரெண்டு பேரும் விஷத்தை வாங்கி குடிச்சுட்டு உசிரை மாய்ச்சிக் குவோம்’ என ஹரிணியின் பெற்றோர் கண்ணீர் விட்டனர்.

லதா ரஜினிகாந்த்

ஹரிணி பற்றி அறிந்த லதா ரஜினிகாந்த், வெங்கடேசனை தொலைபேசி யில் அழைத்துப் பேசி தைரியப் படுத்தினார். 

தான் நடத்தி வரும் குழந்தைகள் அமைப்பு மூலம் இரண்டு மாதங்களாக ஹரிணியைத் தேடிவருவ தாகவும், மும்பையில் ஹரிணி போல ஒரு குழந்தை இருப்பதா கவும் குறிப்பிட்ட அவர், 

மும்பையில் பிரபல ஆர்ட்டிஸ்ட் மூலமாக அந்த மாநில கமிஷனரிடம் பேசி, ஹரிணியை மீட்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப் பதாகத் தெரிவித்தார்.

ஹரிணி காணாமல் போன அன்றைய தினம் அணைக்கட்டு காவல் நிலையத்துக்கு அருகில் கிடைத்த சிசிடிவி புட்டேஜில் சந்தேகத்துக் கிடமான மர்மநபர் ஒருவர் பதிவாகி இருந்தார். 

போலீஸார் அந்த நபர்தான் ஹரிணியைக் கடத்தியதாக சந்தேகப்பட்டு அவரின் புகைப்படத்தை வெளியிட்டனர். இதற்கிடை யில், தனிப்படை போலீஸார் மும்பை சென்று ஹரிணி அங்கு உள்ளாரா என விசாரணை நடத்தினர்.

குழந்தை மீட்பு

இந்நிலையில், அன்று சிறுமி ஹரிணி திருப்போரூரில் இருந்து மீட்கப் பட்டுள்ளார். “காலையில போலீஸ்காரங்க கடப்பாக்கம் வாப்பான்னு கூப்பிட்டாங்க. குழந்தை அடையாளத்தைப் பார்க்கச் சொன்னாங்க. 

கழுத்துல சுடுதண்ணி பட்ட தழும்பை வைத்து இது ஹரிணி தான் எனச் சொன்னேன். இதைச் சொன்னதும் குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டார்கள். 


உலகத்துல இன்றைக்கு இருக்குற சந்தோஷம் போதும். வாழ்க்கை முழுவதும் சந்தோஷமா இருப்பேன்” என ஆனந்த கண்ணீர் வடித்தார் குழந்தையின் தந்தை வெங்கடேசன்.
கடந்த மூன்று மாதங்களாகப் பல இடங்கள் அலைந்து பலரையும் சந்தித்து இறுதியில் தங்களின் குழந்தையை மீட்டுள்ளனர் இந்த தம்பதியினர். 

மேலும்
இந்த குழந்தை கிடைக்க வேண்டும் எனப் போராடிய பல முயற்சிகளை மேற்கொண்ட அனைத்து நல்ல உள்ளங் களுக்கும் எங்கள் சார்பாக நன்றிகள்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 21, January 2025
Privacy and cookie settings