நகைக் கடைக்குச் சொந்தமான நகைகள் எங்கே? - தீவிர விசாரணையில் தனிப்படைகள் !

0
கோவையில், பிரபல நகைக் கடைக்குச் சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளை யர்கள் பயன்படுத்திய இரண்டு கார்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
கடந்த, திங்கள் கிழமை கோவையில் உள்ள பிரபல நகைக் கடைக்கு கேரளாவில் உள்ள அதன் மற்றொரு கிளையி லிருந்து 388 சவரன் தங்க நகைகள் கொண்டு வரப்பட்டது. 


கோவையை அடுத்த காக்காசாவடி பகுதியைக் கடந்து நகைக் கடையின் கார் வந்து கொண்டிருந்த போது, இரண்டு கார்களில் பின் தொடர்ந்து வந்த மர்ப நபர்கள், நகைக் கடையின் காரை சுற்றி வளைத்து, காருக்குள் இருந்த இருவரை இழுத்து தள்ளிவிட்டு காரோடு நகையைக் கொள்ளை யடித்துச் சென்றார்கள். 
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர் களைப் பிடிக்க காவல்துறை தீவிரமாக களமிறங்கியது. நேற்று கோவை மதுக்கரையை அடுத்த தென்றல் நகர் பகுதியில் நகைக் கடைக்குச் சொந்தமான கார் கண்டு பிடிக்கப் பட்டது.
இந்த நிலையில், கொள்ளை யர்கள் பயன்படுத்திய மாருதி ஆல்டோ காரை மதுக்கரைக்கு அடுத்துள்ள வழுக்குப்பாறை பகுதியில் மதுக்கரை போலீஸார் கண்டு பிடித்துள்ளனர். 

இப்படி கார்களில் வந்து காரோடு நகைகளைக் கொள்ளை யடித்து விட்டு கார்களை விட்டுச் செல்லும் டெக்னிக்கான கொள்ளை யர்கள் யார் யார் என்று போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. 
அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை யெல்லாம் சோதனைக் குட்படுத்தும் முனைப்பில் இருக்கிறது காவல்துறை. 


இந்தக் கொள்ளை யர்களைக் கண்டுபிடிக்க ஏற்கெனவே ஏ.டி.ஜி.பி முத்தரசு தலைமையில் 4 தனிப்படை அமைக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தி யுள்ளது போலீஸ்.
நிலவேம்புக் குடிநீர் எப்போது குடிக்க வேண்டும்?
இன்னும் சில நாள்களில் கொள்ளை யர்களைப் பிடித்துவிட வேண்டும் என்ற சவாலோடு விசாரித்து வருகிறது கோவை போலீஸ்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings