நம்முடைய மருத்துவர் பற்றி தெரிந்து கொள்வோம் !

மருத்துவத் தொழிலை செய்பவர்கள் மருத்துவர் ஆவர். மருத்துவர்களில் இருவகை உள்ளனர், நாடி பார்த்து மருத்துவம் செய்பவர் பொதுநல மருத்துவர் (Physicians) என்றும், 
அறுவை சிகிச்சை மூலம் தீவிர நோய்களைக் குணப்படுத்துபவர் அறுவை மருத்துவர் (Surgeon) என்றும் அழைக்கப் படுகின்றனர். 

மிகவும் கடுமையான நீண்ட பல்கலைக்கழகக் கல்விக்கும் நேரடி அனுபவக் கல்விக்கும் பின்னரே ஒருவர் மருத்துவராகப் பணிபுரிய அனுமதிக்கப்படுவார். 


இக்கல்வி சில நாடுகளில் மேல் நிலைக்கல்வி ஆரம்பித்து குறைந்தது ஐந்து ஆண்டுகள் எடுக்கும் சில நாடுகளில் உயர் நிலைப் பள்ளிக் கல்வி முடித்தபின் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கலாம்.

முறையான கல்லூரிக் கல்வி பயிலாமல் குருகுல முறையில் பயின்று அந்த அனுபவத்தை வைத்து சிகிச்சை அளிப்பவர்கள் வைத்தியர் என்று அழைக்கப்பட்டனர். 

ஆனால் தற்பொழுது இந்த வேறுபாடு மறைந்து வருகிறது.சித்த வைத்தியம், ஆயூர்வேத வைத்தியம் மற்றும் ஓமியோபதி ஆகியவை கல்லூரிகளில் கற்பிக்கப் படுவதால் அம்முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் சித்த மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், ஓமியோபதி மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மருத்துவர் கல்வி: ஆங்கில மருத்துவர்:

ஆங்கில மருத்துவம் படிக்க இந்தியாவில் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். இதில் நான்கரை யாண்டுகள் பல்வேறு மருத்துவ கல்வியும் நேரடியாக நோயாளி களை பயன்படுத்தியும் படித்து முடித்த பின்னால் ஒரு வருடம் பயிற்சி மருத்துவமும் முடித்ததும் எம்பிபிஎஸ் பட்டம் வழங்கப்படும்.

சித்த மருத்துவர்:

பண்டைய தமிழ் மருத்துவ முறையைப் பின் பற்றியவர்கள் சித்த வைத்தியர் எனப்பட்டனர். இடையர், எயினர், போன்றோர் போரில் காயமடைந் தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிய வர்களாவர்.

இந்தியாவில் இளங்கலை ஆயுர்வேதம் (B.S.M.S) முடித்தவர்கள் சித்த மருத்துவர்களாகப் பணி புரியலாம்.
ஆயுர்வேத மருத்துவர்:

வடமொழி (சமசுகிருதம்) மருத்துவ முறைமை ஆயுர்வேதம் எனப்பட்டது. ஆயுர்வேத வைத்தியர்கள் இந்தியாவின் தக்காணப்பகுதியில் அதிகம் காணப்பட்டனர்.


இந்தியாவில் இளங்கலை ஆயுர்வேதம் (B.A.M.S) முடித்தவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களாகப் பணிபுரியலாம்.

ஓமியோபதி மருத்துவர்:

இனமுறை அல்லது மாற்று முறை அல்லது ஒத்த மருத்துவம் என ஆங்கில மருத்துவத்திற்கு இணையான சாமுவேல் ஹேனிமேன் என்பவரால் கண்டறியப்பட்ட மேற்கத்திய மருத்துவ முறை ஓமியோபதி மருத்துவம் ஆகும்.

இந்தியாவில் இளங்கலை ஓமியோபதி (B.H.M.S) முடித்தவர்கள் ஓமியோபதி மருத்துவர் களாகப் பணிபுரியலாம்.
Tags:
Privacy and cookie settings