பிறப்புச் சான்றிதல் - சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு !

0
குழந்தைகள் பிறப்புச் சான்றிதழை அந்தந்த மண்டல அலுவலகங் களில் வாங்க வேண்டும், அதையும் விண்ணப்பித்து கடிதம் எழுதி பணம் கட்டி ஒருவாரம் கழித்து கிடைக்கும் என்பன போன்ற 


பழைய நடைமுறை களை மாற்றி ஆன்லைனில் கிடைக்கும் நடை முறையை சென்னை மாநகராட்சி கடந்த சில ஆண்டு களுக்கு முன் கொண்டு வந்தது.

இதன் மூலம் பிறப்புச் சான்றிதழ் எடுக்கும் நடைமுறைச் சிக்கல் தீர்க்கப் பட்டது. இந்நிலையில் இதில் குழந்தைகள் பெயரைப் பதிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இது குறித்த சென்னை மாநகராட்சி அறிவிப்பு வருமாறு:

“பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக் குட்பட்ட அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300 குழந்தைகள் பிறக்கின்றனர்.


மேற்படி பிறக்கும் குழந்தை களுக்கு பிறப்பு சான்றிதழ் களை பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங் களில் உரிய ஆவணங் களுடன் நேரடியாக சென்று விண்ணப்பித்து பெற்று வந்தனர்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி பெருநகர சென்னை மாநகராட்சி யின் இணைய தளமான www.chennaicorporation.gov.in -ல் பிறந்த குழந்தை களுக்கு பெயர் பதிவு செய்வதற் காக ஒரு தனிப்பிரிவு (Child Name Inclusion) உருவாக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings