பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர் வுக்காக துணிப்பை கொண்டு வந்தவர்களு க்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ காய்கறி விற்பனை செய்து பாளை யங்கோட்டை வியாபாரி அசத்தி னார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்தவர் டேவிட்(50). இவர், பாளை யங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி சாலையில் காய்கறி வியாபாரம் செய்து வருகி றார்.
பிளாஸ்டிக் தடை அறி விக்கப் பட்டதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாக தனது கடைக்கு வரும் வாடிக்கை யாளர்களிடம் ஜனவரி 1-ம் தேதி துணிப் பை கொண்டு வந்தால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ காய்கறி விற்பனை செய்யப்படும் என அறிவித்தார்.
அதன்படி, நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ காய்கறி விற்பனை செய்தார். அத்துடன் ஒரு பாக்கெட் உப்பும் இலவசமாக வழங்கினார்.
இதுகுறித்து டேவிட் கூறும் போது, “பிளாஸ்டிக் பொரு ட்களை தடை செய்தது வர வேற்கத்தக்கது. வாடிக்கையா ளர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும் என்பதற் காக இத்திட்டத்தை அறிவித்தேன்.
இன்று (நேற்று) 430 கிலோ காய்கறிகளை கிலோ ஒரு ரூபாய் வீதம் விற்பனை செய்தோம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை யொட்டி
சலுகை விலையில் கரும்பு விற்பனை செய்யவும், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி நாளில் காய்கறிகளை சலுகை விலையில் விற்பனை செய்யவும் உள்ளேன்.
வாடிக்கை யாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் உப்பு பாக்கெட் இலவசமாக வழங்கினேன்” என்றார்.
Thanks for Your Comments