டிராஃபிகிற்க்கு ஸ்கெட்ச் போட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் - நள்ளிரவில் சேசிங் !

0
திரைப் படங்களில் போலீஸார் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, குற்றவாளிகள் எஸ்கேப் ஆவது வழக்கம். ஆனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரே, தான் செய்த குற்றத்தி லிருந்து தப்பிக்க, போலீஸாரிடம் இருந்து தப்பித்து ஓடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. 


நேற்று இரவு தப்பித்து ஓடியவர், இன்னும் அகப்படாமல் இருப்பது தான் சம்பவத்தின் சிறப்பம்சமே... ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் போக்கு வரத்துக் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வந்தவர் பதி. இவர் சத்திய மங்கலம் - பண்ணாரி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து அடாவடியாக லஞ்சம் பெற்று வந்திருக் கிறார். 

பணி நேரம் முடிந்த பின்னரும், சில நேரங்களில் மப்டியில் சென்று வாகன ஓட்டிகளிடம் பணத்தைக் கறப்பதை வாடிக்கை யாகக் கொண்டி ருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய அடாவடி அதிகமாக, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரு க்கு தகவல் வரிசை கட்டிப் பறந்திருக்கிறது.

புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், டிராஃபிக் இன்ஸ்பெக்டரான பதிக்கு நேற்று ஸ்கெட்ச் போட்டிருக் கின்றனர். 
நேற்று இரவு 9 மணியளவில் சத்திய மங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரில், இன்ஸ்பெக்டர் பதி தன்னுடைய சொந்தக் காரை நிறுத்தி விட்டு, சாலையைக் கடக்கின்ற ஒவ்வொரு வாகனங் களையும் மிரட்டி வசூலில் இறங்கி யிருக்கிறார். 

உடன் மனோஜ்குமார் என்ற ஊர்க்காவல் படை காவலரும் இருந்திருக் கிறார். அந்தச் சமயத்தில், கர்நாடகாவி லிருந்து பண்ணாரி வழியாக 3 லாரிகள் கல் லோடு ஏற்றிக் கொண்டு வந்திருக்கிறது. 

அந்த லாரியை தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர், 40,000 பணம் கொடுத்தால் தான் வண்டியை விடுவேன் என கறார் காட்டி யிருக்கிறார்.

சிறிது நேரத்துக்குள், லாரி உரிமையாளர் என்கின்ற பேரில் அங்கு வந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், 40,000 ரூபாயைப் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதியிடம் கொடுத்தி ருக்கிறார். 

சந்தோஷமாக அந்தப் பணத்தை வாங்கிய இன்ஸ்பெக்டரிடம் ‘நாங்கள் விஜிலென்ஸ் போலீஸார்’ என்ற உண்மையை அவர்கள் சொன்னதும், சுதாரித்த இன்ஸ்பெக்டர் பணத்தை கீழே போட்டு விட்டு, தன்னுடைய சொந்தக் காரில் ஏறி சினிமா பாணியில் 100 கி.மீ வேகத்தில் சற்றென பறந்திருக்கிறார். 

செல்லும் வழியில் ஒருவர் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திச் சென்றிருக் கின்றார். பின்தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், அவரைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத் துடன் திரும்பி யிருக்கின்றனர். 


தற்போது வரை தப்பித்துச் சென்ற போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதியை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம். 

``சத்தியமங்கலம் - பண்ணாரி சோதனைச் சாவடி வழியாக, தினமும் 8,000-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து போலீஸார், சோதனை என்ற பெயரில் லஞ்சமாக பெரும் பண மழையில் குளிக்கின்றனர். 

தப்பிச் சென்ற இன்ஸ்பெக்டர் வசூலில் அடாவடியானவர். தினமும் குறைந்த பட்சம் 10,000 இல்லாமல் வீடு திரும்ப மாட்டார். ஒரு வாகனத்து க்கு குறைந்த பட்சம் 50 ரூபாய் என்றால், நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். 
ஏற்கெனவே, இவர் மீது போலி டாக்குமெண்ட் தயார் செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. டிராஃபிக் இன்ஸ்பெக்டர் என்பதால், லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தனக்குத் தெரிந்த குறுக்கு வழிகளில் தப்பித்துச் சென்றிருக்கிறார்” என்றனர்.

கடந்த சில நாள்களாகவே இன்ஸ்பெக்டர் பதியை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் மறைமுக மாகக் கண்காணித்து வந்திருக் கின்றனர். கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென, 7 போலீஸாரோடு சென்றும் கோட்டை விட்டு வந்ததுதான் இதில் பெரும் கொடுமை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings