வங்கதேச பொதுத்தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்து முடிந்ததாகவும் நான்காவது முறையாக அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்கவுள்ள ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார்.
வங்க தேசத்தில் மொத்தம் 300 தொகுதிகளில் 299 தொகுதி களுக்கு ஞாயிற்றுக் கிழமை தேர்தல் நடத்தப்பட்டு உடனடியாக வாக்குப்பதிவு தொடங்கியது.
இதில் வாக்குப்பதிவு நடந்த போது பல்வேறு நகரங் களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் பலியா கினர்.
பொதுத்தேர்தலில் 288 தொகுதிகளில் ஹேக் ஹசினாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதில் எதிர்க் கட்சிகள் வெறும் 6 இடங்களையே கைப்பற்றின.
இந்த வெற்றி மூலம் ஷேக் ஹசினா நான்காவது முறையாக வங்கதேச அதிபராக வரலாற்று சாதனை படைத்தார்.
இந்த நிலையில் தேர்தல் முறையாக நடத்தப்பட வில்லை என்றும் மீண்டும் முறையாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இதற்கு ஷேக் ஹசினா பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, இந்தத் தேர்தல் சுதந்திர மாகவும் நேர்மை யாகவும் நடந்ததுள்ளது.
என்னுடைய கட்சி அனைவருக் காகவும் உழைத்தது. எதிர்க் கட்சிகளின் தோல்விக்கு அவர்களே காரணம். அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சரியாக ஈடுபட வில்லை” என்றார்.
பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி ஷேக்ஹசினா வின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் மோடி, வங்கதேசத் தேர்தலில் வெற்றி பெற்ற ஹேக் ஹசினாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
Thanks for Your Comments