நாடு விட்டு நாடு புலம் பெயரும் கட்டிடங் களில் கூடு கட்டி வாழும் ஸ்டார்லிங் என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்ட பறவையினம் இஸ்ரேலில் வானில் ஒரு அரிய காட்சி அதிசய நடனத்தை அரங்கேற் றியது.
நெகேவ் பாலை வனத்தில் ஒவ்வொரு நாள் காலையும் இந்த அரிய ஒரு வடிவத்தை அவை யனைத்தும் வானில் உருவாக்கி 2 வாரங்க ளாக தினமும் அசத்தி வருகிறது.
இந்த பறவையினம் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளி லிருந்து புலம் பெயர்ந்து செல்பவை.
இது வானில் இருண்ட ஒரு சுருள் வடிவ எழும்பும் ஒரு ராட்சத பாம்பு போன்ற வடிவம் உருவாக்கு கிறது. மெல்லிய ரீங்காரமும் இட்டு அது நகர்ந்து செல்கிறது.
இவை பெரிய அளவில் தங்களை ஒன்று சேர்த்துக் கொள்ளும் பழக்கம் உடையது
இது குறித்து இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக் கழக பறவை ஆராய்ச்சி யாளர் யோஸி லிஷெம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத் துக்குக் கூறும் போது,
இப்படி பெரிய அளவில் பெரிய ஒரு புரியாத அரிய வடிவத்தில் வானில் பறப்பதன் மூலம் தன்னை வேட்டை யாடும் பறவையினத் திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்கிறது என்கிறார்.
இதன் ஆசிய பெரிய வகையின மாதிரிதான் மைனாக்கள் என்று அழைக்கப் படுவதாகத் தெரிகிறது. இது மட்டு மல்லாமல் பல்வேறு வகையினங்கள் இதில் உள்ளன என்றும் கூறப்படு கிறது.
Thanks for Your Comments