இங்கிலாந்தின் நார்த் போல்க் நகரில் உணவு முறை குறித்தும், அதனால் ஏற்படும் உடல் நலம் பற்றியும் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 25 ஆயிரம் ஆண் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப் பட்டது.
அதில் சாக்லேட் அதிகம் சாப்பிடும் இளைஞர்கள் உடல் எடை குறைவாகவும், ரத்தம் அழுத்தம் மற்றும் புரதம், சர்க்கரை அளவு சீராக இருப்பது கண்டறியப்பட்டது.
அதே நேரத்தில் உடலின் செயல்பாடுகள் சீரான அளவில் நடப்பதால் இருதயம் சம்பந்தப் பட்ட நோய்கள் வர வாய்ப்பு இல்லை. இவர்கள் தினமும் 100 கிராம் அளவில் சாக்லேட் சாப்பிட்டு வந்தவர்கள்.
அதனால் உடலுக்குக் கூடுதல் சக்தி கிடைத்ததால் ரத்த ஓட்டம் சீராகிய தால் இருதய நோய்கள் தாக்க வில்லை என நிபுணர்கள் தெரிவி த்துள்ளனர்.
இதற்கிடையே சாக்லேட் குறைவாகச் சாப்பிட்ட 25 சதவீதம் பேர் இருதய நோய்களினால் அவதிப் படுவதும் தெரிய வந்தது. இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது.
எனவே தினமும் 100 கிராம் அளவு பாலினால் தயாரிக்கப் பட்ட சாக்லேட்டுகள் மற்றும் கருப்பு சாக்லேட் சாப்பிடுபவர் களுக்கு அதிக அளவில் இருதய நோய்கள் ஏற்படாது எனக் கண்டறியப் பட்டுள்ளது.
Thanks for Your Comments