நாளுக்கு நாள் போக்கு வரத்துக்கு நெரிசல்களும், அதனால் ஏற்படும் சாலை விபத்துகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. விபத்துகளை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வளவோ முயற்சி செய்தும் விபத்துகளை தடுப்பது பெரும் சவாலாகவே உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் பண்ணா என்ற மாவட்டத்தை சேர்ந்த ஆஷா என்ற பெண், பேருந்தில் பயணம் செய்யும்போது தலையை வெளியே நீட்டி யுள்ளார். அப்போது சாலையில் இருந்த மின் கம்பத்தில் தலை மோதி, தலை துண்டாகி இறந்துள்ளார்.
56 வயதாகும் ஆஷா என்ற அந்த பெண் நேற்று சத்நா என்ற மாவட்டத்தில் இருந்து பண்ணா என்ற மாவட்டத்திற்கு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து அதிவேகத்தில் சென்றதால் ஆஷாவிற்கு தலைசுற்றல் ஏற்பட்டு வாந்தி வந்துள்ளது.
வாந்தி எடுப்பதற் காக தலையை வெளியே நீட்டி யுள்ளார் ஆஷா. அப்போது சாலையில் இருந்த மின் கம்பத்தில் ஆஷாவின் தலை பயங்கர வேகத்தில் மோதி யுள்ளது. இதனால் தலை துண்டாகி அவர் இறந்துள்ளார். விபத்தை நேரில் பார்த்தவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத் துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் ஆஷாவின் உடலை கைப்பற்றி சம்மந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுனரை கைது செய்துள்ளனர். ஓட்டுநர் பேருந்தை அசுர வேகத்தில் ஓடியதே இந்த விபதுக்கு காரணம் என கூறப்படுகிறது.
Thanks for Your Comments