தந்தைக்காக மருத்துவ மனையில் மகன் திருமணம் நெகிழ்சசி !

0
ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடும் தந்தைக் காக தனது திருமண த்தை முன் கூட்டியே மருத்துவ மனையிலேயே நடத்திய மகனின் செயலைப் பார்த்தவர்கள் நெகிழ்ந்தனர். சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் வசிப்பவர் சுதேஷ் (60) .
தந்தைக்காக திருமணம்


இவரது மனைவி மல்லிகா (55) சுதேஷ் திருவொற்றி யூரிலேயே ஃபிட்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு பிரகாஷ், சரவணன், சதீஷ் என்ற 3 மகன்கள் உள்ளனர். சதீஷுக்கு திருமணம் செய்ய உத்தேசித்த பெற்றோர் திருவொற்றியூரை சேர்ந்த சித்ரா என்ற பெண்ணை நிச்சயித்தனர். 

வரும் பிப்.15-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக் கப்பட்டு பத்திரிகைகள் அடிக்கப்பட்டு சந்தோஷமாக உறவினர் களுக்கு வைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி வழக்கமாக வேலைக்கு சென்ற சுதேஷ் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தண்ட வாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி விபத்தில் சிக்கினார். 

இதில் சுதேஷ் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். அங்கு அவரது இடுப்புக்கு கீழ் தொடை வரை இரண்டு கால்களும் அகற்றப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இன்று (சனிக்கிழமை) அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது. இதில் தந்தைக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என மகன் சதீஷ் அஞ்சினார். தனது மகன் திருமணத்தை அறுவைச் சிகிச்சைக்கு முன் பார்க்க தந்தையும் ஆசைப்பட்டார்.

ஆயிரம் பேர் பார்க்க மண்டபத்தில் விமரிசை யாக நடக்க வேண்டிய திருமண த்தை தந்தையின் நிலையை எண்ணி அவரது விருப்பத் திற்காக மருத்துவ மனையில் நடத்த முடிவு செய்தார் மகன் சதீஷ்.


இருவீட்டார் உறவினர்களிடையே நிலைமை எடுத்துச் சொல்லப் பட்டது, அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதை யடுத்து நேற்று இரவு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் சதீஷ், சித்ராவின் கழுத்தில் தாலியை கட்டினார்.

பின்னர் தம்பதிகள் தந்தை சுதேஷின் வார்டுக்கு சென்றனர். அங்கு அவரிடம் மாலையுங் கழுத்துமாக தம்பதிகள் ஆசி பெற்றனர். அவர்களு க்கு தந்தை சுதேஷ் ஆசி கூறினார். இதைப் பார்த்த அங்கிருந்த உறவினர்கள் கண் கலங்கினர். இதனால் மருத்துவமனை வளாகமே ஒருவித நெகிழ்ச்சி யில் ஆழ்ந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings