வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பை புதுப்பிக்கும் தேதி !

0
வேலை வாய்ப்பு அலுவலகங் களில் விடுபட்டுப் போன பதிவு மூப்பை புதுப்பித்துக் கொள்வதற்கான காலஅவகாசம் ஜனவரி 24-ம் தேதி முடிவடைகிறது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பை புதுப்பிக்கும் தேதி  !
இதுவரை 77 ஆயிரம் பேர் பதிவை புதுப்பித்துள்ள தாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரிகளில் இறுதி படிப்பை முடிப்பவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகங் களில் பதிவு செய்வது வழக்கம். 

பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங் களிலும், முதுகலை படிப்பு 

மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழிற்கல்வி கல்வித் தகுதியை மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத் திலும் (சென்னை மற்றும் மதுரை) பதிவு செய்ய வேண்டும். 

இவ்வாறு பதிவு செய்யும் பதிவு தாரர்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் பதிவை புதுப்பித்து வர வேண்டும். அப்போது தான் பதிவு மூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும். இல்லா விட்டால் அது காலாவதியாகி விடும்.
இந்த நிலையில், கடந்த 2011முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பதிவு மூப்பை புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் பதிவை புதுப்பித்துக் கொள்ள கடந்த 25.10.2018 முதல் 24.1.2019 வரை3 மாதங்கள் தமிழக அரசு கால அவகாசம் வழங்கியது. 

இதை பயன்படுத்தி, பதிவு மூப்பு விடுபட்டவர்கள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணைய தளத்தை (www.tnvelaivaaippu.gov.in) பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாகவும், 

சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றும் பதிவை புதுப்பித்து வருகிறார்கள். 

இது தொடர்பாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜோதி நிர்மலா சாமி கூறிய தாவது:- வழக்கமாக இத்தகைய சலுகை 2 அல்லது 3 ஆண்டு களுக்கு மட்டுமே அளிக்கப்படும். 

ஆனால், இந்த முறை தமிழக அரசு பதிவுதாரர் களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2011 முதல் 2016 வரை 6 ஆண்டு களுக்கு பதிவை புதுப்பித்துக் கொள்ள சலுகை அளித்துள்ளது. 

இது வரையில் ஏறத்தாழ 77 ஆயிரம் பேர் விடுபட்டுப் போன தங்கள் பதிவை புதுப்பித் துள்ளனர். 

அவர்களில் 59 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாகவும், எஞ்சிய 18 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் புதுப்பித் துள்ளனர். 

ஏற்கெனவே அரசு அறிவித்தபடி, இதற்கான கால அவகாசம் ஜனவரி 24-ம் தேதி நிறைவடைகிறது. 

எனவே, மேற் குறிப்பிட்ட கால கட்டத்தில் புதுப்பிக்க வேண்டிய பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவு தாரர்கள் வரும் 24-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். 
படித்து முடித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் சிரமப்படும் இளைஞர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத் திலும் வெள்ளிக் கிழமை அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறோம். 

இதில், ஏராளமான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் பணியாளர் களை தேர்வு செய்து கொள்கின்றன.  

வேலை வாய்ப்பு வெள்ளி என்ற இந்த புதிய திட்டத்தின் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி முதல் இது வரையில் 69 ஆயிரத்து க்கும் மேற்பட்டோர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
திறன் மேம்பாட்டுப் பயிற்சி மேலும், வேலை வாய்ப்பு அலுவலக த்தில் பதிவு செய்துள்ள பதிவு தாரர்களை வேலை வாய்ப்புக்கு உகந்தவர்களாக மாற்றும் வகையில் 

அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் திறன் மேம்பாட்டு அலுவலர் களை நியமித் துள்ளோம். இவ்வாறு ஜோதி நிர்மலா சாமி தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings