கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தை விட 24 சதவீதம் மழை குறைவாக பெய்தது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.
பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வெப்பநிலை உயர்வு குறித்த பருவநிலை மாற்ற நிகழ்வு (எல்நினோ), எதிர் பார்த்தபடி நிகழாமல் தாமத மானதால் மழை குறைவாக பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் திருந்தது.
அடுத்து வரும் மாதங்களில் எல்நினோவின் தாக்கம் இருக்க வாய்ப்பிருப்ப தாகவும் அந்த மையம் தெரிவித் திருந்தது. இதற்கிடையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகி யுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு அந்தமான் கடல் பகுதிமற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் நிலநடுக் கோட்டு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி யுள்ளது.
இது காற்றழுத்த தாழ்வு பகுதி யாகவோ, அதற்கு மேலோ வலுப்பெறும் போது தான் அது தமிழகம் நோக்கி வருமா என்பதை கணிக்க முடியும். இது வலுப்பெற லாம், வலுப்பெறா மலும் போகலாம்.
ஒரு வேளை வலுப் பெற்றால், தற்போது வடக்கு மற்றும் கிழக்கு திசைக் காற்று தமிழகம் நோக்கி வீசி வருவதால், தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மலைப் பிரதேசங் களில் மிகக் குறைந்த வெப்பநிலையாக உதகை மற்றும் வால்பாறையில் 5 டிகிரி, நிலப் பகுதியான தருமபுரி மாவட்டத்தில் 15.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி யுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மூடுபனியும், நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் உறை பனியும் நிலவ வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
Thanks for Your Comments