கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தாய், மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற ஆசிரியர், தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை கருமத்தம்பட்டி அமலி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கிய தாஸ் (38). திருப்பூர் மாவட்டம் கூலி பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 6 மாதங்களாக கருமத்தம் பட்டியில் வாடகை வீட்டில் குடியிருந் துள்ளார். இவரது மனைவி ஷோபனா (30). மகன் ரித்திக் மைக்கேல் (7), தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவர்களது ஒன்றரை வயது மகள் ரியா ஏஞ்சலின். இவர்களுடன் அந்தோணி ஆரோக்கிய தாஸின் தாய் புவனேஸ்வரியும் (65) வசித்து வந்தார்.
கடந்த 12 ஆண்டுகளாக அந்தோணி ஆரோக்கிய தாஸுக்கு முதுகுவலி இருந்துள்ளது. இதற்கு பல இடங்களிலும் சிகிச்சை பெற்றும், குணமாக வில்லையாம்.
இதனால் மன வேதனையடைந்த நிலையில் இருந்த அந்தோணி ஆரோக்கிய தாஸ், நேற்று மனைவி, தாய், மகன், மகள் ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளார்.
பின்னர், அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த கருமத்தம்பட்டி போலீஸார், 5 பேரின் சடலங் களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனை க்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்களது முடிவுக்கு வேறு யாரும் காரணம் அல்ல என்று அந்தோணி ஆரோக்கிய தாஸ் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீஸாரிடம் சிக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியது.
Tags:
Thanks for Your Comments