நம் உடலின் சீரான வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியமானவையாகும். அதிலும் குறிப்பாக தை வெகுவாக பாதிக்கும்.
அனைத்து டயட்களிலும் அதனால் தான் புரோட்டின் அதிகம் சேர்க்கப் படுகிறது. புரோட்டின் எந்த அளவிற்கு உடலுக்கு நல்லதோ,
அதே நேரம் அதன் அளவு அதிகரிக்கும் போது அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒருவரின் உடல் எடைக்கு ஏற்ப அவர்கள் ஒரு நாளைக்கு 0.8 கிராம் புரோட்டின் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச் சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த அளவு அதிகரிக்கும் போது அது பல பிரச்சினை களை உண்டாக்கும். இந்த பதிவில் அதிகளவு புரோட்டினால் உங்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
மலச்சிக்கல்
அதிகளவு புரோட்டின் எடுத்துக் கொள்வது உங்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். உண்மை தான்,
அதிகளவு புரோட்டின் எடுத்துக் கொண்டு குறைவான அளவு கார்போ ஹைட்ரேட் எடுத்துக் கொள்ளும் போது உங்கள் உடலுக்கு குறைந்தளவு நார்ச் சத்துக்களே கிடைக்கும்.
நமது வயிற்றின் ஆரோக்கி யத்திற்கு நார்ச் சத்துக்கள் மிகவும் அவசிய மானதாகும். அதன் அளவு குறையும் போது அது உங்கள் வயிற்றில் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
நீர்ப்போக்கு பிரச்சினைகள்
புரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது நீங்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் உங்கள் வயிறு ஆரோக்கிய மாக இருக்கும்.
அதிகளவு புரோட்டின் சாப்பிடும் போது அது உங்கள் உடலில் உள்ள நீரின் அளவை குறைக்கும், மேலும் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
வாய் துர்நாற்றம்
அதிகளவு புரோட்டினால் ஏற்படும் மற்றொரு பிரச்சினை வாய் துர்நாற்றம் ஆகும். புரோட்டின் உணவுகள் உங்கள் வாயின் துர்நாற்ற த்தை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றது.
இந்த நிலை ஹலிடோசிஸ் என்று அழைக்கப் படுகிறது. இதை ஒரு போதும் புறக்கணிக்க கூடாது.
மோசமான மனநிலை
நீங்கள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினை இதுவாகும். பொறுமையே இல்லாமல் நீங்கள் அடிக்கடி மிகவும் மோசமான மனநிலையில் இருந்தால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில் நீங்கள் சாப்பிடும் அதிகளவு புரோட்டின் உங்கள் மனநிலையில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
உயர் கொழுப்பு
இது உங்கள் உடலில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறியாகும். அதிகளவு புரோட்டின் சாப்பிடும் போது அது உங்கள் உடலில் கொழுப்பு களின் அளவை அதிகரிக்கும்.
மேலும் இது உங்களை அடிக்கடி சோர் வாக்குவதுடன் சுவாசப் பிரச்சினை களையும் ஏற்படுத்தும். உங்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் சாப்பிடும் டயட்டில் மாற்றம் கொண்டு வாருங்கள்.
எடை அதிகரிப்பு
காரணமே இன்றி சமீபத்தில் உங்கள் எடை அதிகரித்தால் நீங்கள் சாப்பிடும் புரோட்டின்களின் அளவை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
நொறுக்குத் தீனிகள், ஆரோக்கிய மற்ற உணவுகளை சாப்பிடாமல் அதிகளவு புரோட்டின் சாப்பிடுவ தாலேயே உங்களின் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் இதில் அதிகளவு கலோரிகள் உள்ளது.
Thanks for Your Comments