விமானிகள் பற்றாக்குறையால் திண்டாடிக் கொண்டிரு க்கும் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனம் இன்றும் 130 விமானங் களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனம் 210 விமானங் களுடன் தினமும் 1,300 விமான சேவைகளை வழங்குகிறது.
இந்நிறுவனம் கடந்த சனிக்கிழமை முதல் விமானிகள் பற்றாக் குறையால் திணறிக் கொண்டிருக் கிறது. விமானப் பயணம் கடைசி நிமிடங்களில் ரத்தாகும் நிலை தொடர்கிறது. சராசரியாக தினமும் 30 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப் படுகின்றன.
இதனால் பயணிகள் இண்டிகோ நிறுவனத்தின் மீது அதிருப்தி யில் உள்ளனர். கடந்த புதன்கிழமை 49 விமானங்களும் வியாழக் கிழமை 70 விமானங் களும் ரத்து செய்யப் படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது.
விமானிகள் பற்றாக்குறை மட்டுமின்றி, மோசமான வானிலை மற்றும் விமான நிலைய பராமரிப்பு பணிகளும் இண்டிகோ விமானங்கள் ரத்தாக காரணமாகி யுள்ளன. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு 130 விமான சேவையை ரத்து செய்து விட்டதாக அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
Thanks for Your Comments