தமிழக போலீசை குறைவாக எடைபோடும் பலருக்கும் இது ஒரு சவுக்கடி. நம் போலீசின் திறமையே அபாரம். இதை படித்து விட்டு சொல்லுங்கள் சூப்பர். மற்றவர்களுக்கும் சேர் செய்யுங்கள்.
சென்னை அமைந்த கரையில் அத்தையைக் கொன்ற வழக்கில் மாணவனைப் பிடிக்க பெரிதும் உதவியது சூயிங்கம் என்ற தகவல் வெளியாகி யுள்ளது. சென்னை அமைந்த கரையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர், கடந்த 2-ம் தேதி படுக்கை யறையில் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து அமைந்தகரை இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் விசாரணை நடத்தினர். மேலும், இந்தக் கொலையைக் கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர்கள், சரவணன், ஜார்ஜ் மில்லர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது. இந்தக் கொலையைக் கண்டு பிடித்தது எப்படி என்று போலீஸார் நம்மிடம் விவரித்தனர்.
`தமிழ்ச் செல்வியின் சடலத்தைப் பார்த்ததும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதினோம். இடது கை நரம்பு அறுக்கப் பட்டிருந்தது. அதில் பதிவாகி யிருந்த கைரேகையை ஆய்வு செய்தோம். அடுத்து இந்த வழக்கில் முக்கியமான தடயமாகக் கொலை நடந்த இடத்தில் சூயிங்கம் ஒன்று கிடந்தது.
அது தொடர்பாக விசாரித்த போது தான் தமிழ்ச் செல்வியின் மருமகனான 10-ம் வகுப்பு மாணவனின் மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவனிடம் விசாரித் தபோது எந்தத் தகவலையும் சொல்ல வில்லை. இந்தச் சமயத்தில் தமிழ்ச் செல்வியின் பிரேத பரிசோதனை யில் அவர் மூச்சுத்திணறி இறந்திருக்கும் தகவல் தெரிய வந்தது.
மேலும், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவில் அந்த வீட்டுக்குள் மாணவன் செல்லும் காட்சிகள் பதிவாகி யிருந்தன. அது குறித்து மாணவனிடம் விசாரித்த போது `சுத்தியல் வாங்கச் சென்றேன். ஆனால், சுத்தியல் இல்லை என்று அத்தை கூறிவிட்டார். இதனால் திரும்ப வந்து விட்டேன்' என்று எங்களிடம் தெரிவித்தான்.
இதை யடுத்து, மாணவனை விட்டு விட்டோம். இந்த வழக்கு தொடர்பாக, தமிழ்ச் செல்வியின் உறவினர்களிடம் விசாரித்த சமயத்தில் இந்த மாணவன், சூயிங்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் அவனிடம் சென்று சூயிங்கம் கேட்டோம்.
அவனும் கொடுத்தான். அதுவும் தமிழ்ச் செல்வியின் உடல் அருகே கைப்பற்றப் பட்ட சூயிங்கமும் ஒன்று என்பது தெரிந்தது. தமிழ்ச் செல்வி கொலை வழக்கும் முடிவுக்கு வந்தது. மாணவனும் எங்களிடம் உண்மையை ஒத்துக் கொண்டான்" என்றனர்.
Thanks for Your Comments