அமேசான் காடுகளில் 36 அடி நீள திமிங்கலம் என்று இறந்து கிடந்துள்ளது. இது சுற்றுச் சூழல் ஆரவலர்களை அதிர்ச்சி யடைய செய்துள்ளது. ஏபிசி செய்திகளின் படி பிரேசிலின் மாஜிரோ தீவு பகுதியில் அமேசான் நதியின் முகப்பில் கடலிலிருந்து 15 மீட்டர் தூரத்தில் இறந்து கிடந்துள்ளது.
மஜரோ தீவுகளில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறும் போது, "இந்த திமிங்கலம் செத்து தான் கரை ஒதுங்கியுள்ளது. மாங்குரோவ் பகுதிகளின் உயர் அலைகளில் இது கரை ஒதுங்கி யிருக்க வாய்ப்புள்ளது" என்று கூறுகின்றனர்.
"இது பெரிய திமிங்கலம் அல்ல... குறைந்த வயதுடையது இன்னும் சொல்ல போனால் குழந்தை திமிங்கலம்" என்று கூறி யுள்ளனர். தி சன் பத்திரிக்கை யில் கடல் ஆய்வாளர் ரெனெட்டா கூறும் போது, "இது எப்படி இங்கு வந்தது என்று தெரிய வில்லை.
இது கடலின் மிக அருகில் மிதந்து வந்திருக்கிறது. இதனை எடுத்து மாங்குரோவ் பகுதிகளில் புதைத் துள்ளோம்" என்றார். சமூக வலை தளங்களில் இந்த திமிங்கலத்தின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த ஆய்வு களையும் செய்து வருகின்றனர்.
Thanks for Your Comments