நான்கு குழந்தைகள் பெற்றால் அந்தப் பெண்கள் வருமான வரி செலுத்த வேண்டாம், கடன் தள்ளுபடி என அதிரடி சலுகையை ஹங்கேரி நாடு அறிவித்துள்ளது. மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் 83.7 சதவிகித ஹங்கேரியர்கள் வசித்து வருகின்றனர். இதன் தலைநகரம் புடாபெஸ்ட். அந்நாட்டு பிரதமர் விக்டர் ஒர்பான்.
உலக அளவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் வேளையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிவிப்பு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. அந்நாட்டின் மக்கள் தொகை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறது. குறிப்பாக ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு குறைவதாகக் கணக்கெடுக்கப் பட்டுள்ளது.
அங்கு வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாகக் குடியேறி வருகின்றனர். இதனால் ஹங்கேரியர் களைவிட வெளி நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகையை சரிசெய்யும் விதமாகப் பல்வேறு சலுகைக ளைப் பிரதமர் விக்டர் ஒர்பான் அறிவித்துள்ளார்.
அதன்படி, 40 வயதுக்குக் குறைந்த, திருமணமான ஒரு பெண் 4 குழந்தை களைப் பெற்றால் அவர் வருமானவரி செலுத்தத் தேவை யில்லை. அவருக்கு ஹங்கேரி பணத்தில் சுமார் 10 மில்லியன் வட்டி இல்லாமல் கடனாக வழங்கப்படும். இந்தப் பணத்தில் 7 இருக்கைகள் கொண்ட வாகனம் வாங்கிக் கொள்ளலாம்.
அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்து விட்டால் முழுக்கடனும் ரத்து செய்யப் பட்டுவிடும். திரும்பிச் செலுத்தத் தேவை யில்லை. இது தவிர குழந்தைகள் பராமரிக்கும் மையங்கள், கின்டர்கார்டன் பள்ளிகள் தொடங்கவும் அதிகளவில் நிதி வழங்கப்பட உள்ளது. `ஹங்கேரிய குழந்தைகள் தான் எங்களுக்குத் தேவை.
நாட்டின் எதிர் காலத்துக்கு இது அவசியம்’ என்று பிரதமர் விக்டர் ஒர்பான் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் ஓர்பான் தனது ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு 'பொது ஆலோசனை' என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.
அப்போது பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள், கருத்து களைக் கேட்டறிந்தார். அதில் பெரும் பாலோனோர் அந்நியக் குடியேற்றம் குறித்துப் பல ஆலோசனை களைத் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் தான் இந்த சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன
Thanks for Your Comments