‘மிராஜ் 2000’ ரக போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக் குள்ளான சம்பவம் தொடர்பாக அந்த விமானத்தை தயாரித்த ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தின் தலைவர் மாதவன் விளக்கமளித் துள்ளார். இந்திய விமானப் படையைச் சேர்ந்த ’மிராஜ் 2000’ ரக போர் விமானம், பெங்களூரு வில் அண்மையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, அந்த விமானத்தை தயாரித்த நிறுவனமான ஹெச்.ஏ.எல். எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை மத்திய வெளியுறவுத் துறை இணை யமைச்சரும், முன்னாள் ராணுவத் தளபதி யுமான வி.கே.சிங் அந்நிறுவன த்தை மிகக் கடுமையாக விமர்சித் திருந்தார்.
குறிப்பாக, மூன்றரை ஆண்டு களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட ‘புரோகிராம்’ அடிப்படை யில் அந்த விமானம் இயக்கப் பட்டதால் தான் இந்த விபத்து நேர்ந்தது என குற்றம் சாட்டி யிருந்தார். அது மட்டுமின்றி, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ஹெச்.ஏ.எல்., நிறுவனத்திடம் ஏன் வழங்க வில்லை என சிலர் கேள்வி வேறு எழுப்புகின்றனர் என மறை முகமாகச் சாடி யிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக பேசிய ஹெ.ஏ.எல்., நிறுவனத்தின் தலைவர் மாதவன், "இந்த விபத்து தொடர்பாக ஊடகங்கள் பல விதமான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த செய்தி களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது. இந்த விபத்து தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், தீர்ப்பு வெளியாகும் வரை காத்திருப்போம்" என்றும் மாதவன் கூ றியுள்ளார்.
Thanks for Your Comments