டிராயின் புதிய அறிவிப்பை அமல்படுத்து வதற்கான கால அவகாச நீட்டிப்பை உடனே நடைமுறைப் படுத்தவும் , ரூ.200 க்குள் பொது மக்கள் விரும்பும் சேனல்களை பெரும் வகையில் அறிவிப்பில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தி யும் கோவையில் கேபிள் டிவி ஆப்பிரேட்டர்கள் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
டிராய் எனப்படும் மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டிருந்தது.
அதில், வாடிக்கை யாளர்கள் 100 இலவச சேனல் களையோ அல்லது கட்டண சேனல் களையோ ரூ.153.40 கட்டணத்திற்கு தேர்வு செய்து கண்டுக் களிக்கலாம் எனத் தெரிவிக்கப் பட்டது. புதிய கட்டணம் மாதம் ரூ.130ம், அதற்கான ஜி.எஸ்.டி.யை சேர்த்து மாதம் ரூ.154 ரூபாய் ஆகிறது.
புதிய அறிவிப்பின் படி வாடிக்கை யாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாகி வருகிறது.
ஏற்கனவே, டிராயின் புதிய கட்டண விதிகளுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த நடை முறையை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஆனால், இதுவரை அந்த உத்தரவு அமலாக்கப் படவில்லை என்றும், இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி யுள்ளதாகவும் கூறி கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கோவை 100 அடி சாலையில் ஆம்னி பேருந்து நிலையம் அருகிலுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவன அலுவலகம் முன்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர.
அப்போது, ஜி.எஸ்.டி.யில் விளக்கு அளிக்கப்பட வேண்டும் அல்லது வரியை 18 சதவீதத்தி லிருந்து 5 சதவீதமாக் குறைக்க வேண்டும், தற்போது சாதாரண நடுத்தர குடும்பத்தினர் ரூ.400 க்கும் மேல் செலவழித்து சேனல்கள் கண்டு களிக்கும் நிலை உள்ளதால்
மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி யுள்ளதாகவும் ரூ.200 க்குள் அனைத்து சேனல்களும் பெரும் வகையில் கட்டண முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Thanks for Your Comments