புல்வாமா தாக்குதலில் தூத்துக்குடி வீரரைத் தொடர்ந்து, அரியலூரைச் சேர்ந்த வீரரும் பலியாகி உள்ளது தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆண் வாரிசுகளை இழந்து குடும்பம் தவித்து வருகிறது.
விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய சி.ஆர்.பி.எப் வீரர்கள் நேற்று மாலை ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு துணை ராணுவப் படையினர் பேருந்து மூலம் சென்றனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள
அவந்திபோரா நெடுஞ் சாலையில் பேருந்து சென்ற போது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி 350 கிலோ வெடி பொருட்களுடன் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது காரை மோதி வெடிக்கச் செய்தார்.
இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 45 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களிள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலப் பேரியை சேர்ந்த சுப்பிரமணியன் (28), என்பது முதலில் வந்த தகவல்.
தமிழகத்தி லிருந்து ஒரு வீரர் மரணமடைந்தார் என அனைவரும் நினைத்திருந்த நேரத்தில் அரியலூரைச் சேர்ந்த மற்றொரு வீரரும் உயிரிழந்த தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சி. சிவசந்திரன் (30) இவரது தந்தை சின்னையன் கூலித்தொழிலாளி. சிவச்சந்திரனு க்கு ஒரு அக்கா, ஒரு தம்பி, வாய் பேச முடியாத ஒரு தங்கை உள்ளனர். எம்.ஏ பிஎட் பட்டதாரியான சிவச்சந்திரனு க்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. காந்திமதி என்கிற மனைவி உள்ளார்.
சிஆர்பிஎப் -ல் இணைந்த சிவச்சந்திரன் விடுமுறை முடிந்து செல்லும் போது நடந்த தாக்குதலில் அவரும் உயிரிழந்தார். அவரது மறைவு கேட்டு கிராமமே சோகத்தில் மூழ்கியது.
சிவச்சந்திரனின் தம்பி செல்வச் சந்திரன் கடந்த ஆண்டு சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தற்போது வீட்டின் ஒரே ஆண் வாரிசான சிவச்சந்திரனும் உயிரிழந்தது அக்குடும்பத்தை இக்கட்டில் தள்ளி யுள்ளது.
Thanks for Your Comments