காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலியாகி யிருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி அன்று,
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்னும் நபர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்த சம்பவமானது இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யிருக்கும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திலே மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந் திருக்கிறது.
இதுகுறித்து லெப்டினன்ட் கர்னல் ஆனந்த் கூறுகையில், இன்று மதியம் 3 மணிக்கு ராணுவ மேஜர், வீரர் ஒருவருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந் துள்ளார்.
ராஜோவ்ரியின் நொவ்ஷேரா பிரிவின் லாம் பகுதியில் சென்று கொண்டி ருக்கும் போது, அழுக்கு படிந்த பாதையில் புதிதாக நிலம் தோண்டப் பட்டிருப்பதை பார்த்து, சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண் டுள்ளார்.
அப்போது உள்ளே புதைத்து வைக்கப் பட்டிருந்த கன்னி வெடி திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் மேஜர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, ராணுவ வீரர் படுகாய மடைந்துள்ளார் என தெரிவித் துள்ளார்.
ஏற்கனவே 40 வீரர்கள் தற்கொலைப் படை தாக்குதலில் பலியாகி யிருக்கும் நிலையில், மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ் ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments