இந்தியாவில் முதல் முறையாக புற்றுநோய் பாதிப்பால் கருப்பை நீக்கப்பட்ட பெண்ணுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ஜி.ஜி.மருத்துவ மனையில் வெற்றிக ரமாக இந்த சாதனை நடத்தப் பட்டுள்ளது.
உதவி இயக்குனர் டாக்டர் பிரியா செல்வராஜ் கூறியதாவது, கேரள மாநிலத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் புற்று நோயால் பாதிக்கப் பட்டதை யடுத்து அவருக்கு கருப்பை மற்றும் ஒரு இனப்பெருக்க மண்டலம் நீக்கப் பட்டது.
இந்நிலை யில் குழந்தை பெற்றுக் கொள்ள அப்பெண் விருப்பம் தெரிவித்ததை யடுத்து, அந்த பெண்ணின் மற்றொரு இனப்பெருக்க மண்டல த்தை அறுவை சிகிச்சை செய்து, வலதுபுற வயிற்று பகுதிக்கும் தோல் பகுதிக்கும் இடையே மருத்துவர்கள் பொருத்தி யிருந்தனர்.
அவருடைய இனப்பெருக்க மண்டலத்தை ஊக்குவிக்கும் ஊசி போட்டு கருமுட்டை வளர செய்யப் பட்டது. பின்னர் அக்கருமுட் டையை உறிஞ்சி எடுத்து,
அவரது கணவரின் விந்தணு வுடன் இணைய செய்து, சோதனைக் குழாய் குழந்தை சிகிச்சை முறையில் வாடகை தாய் ஒருவரின் கர்ப்பப் பையில் செலுத்தப் பட்டது. இதன் மூலம் கடந்த 16-ந்தேதி 2.62 கிலோ எடையில் பெண் குழந்தை பிறந்தது.
Thanks for Your Comments