பாலகோட்டில் உள்ள பயிற்சி முகாமில் இருந்து கொண்டுதான் இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டங்களை தீவிரவாதிகள் தீட்டியும், செயல் படுத்தியும் வந்தனர். பயிற்சி முகாமில் 600 பேர் தங்கும் அளவுக்கு வசதிகள் உள்ளன. இந்த புகைப் படங்களை மத்திய அரசு தரப்பில் இருந்து வெளியிடப் பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிர மித்திருக்கும் காஷ்மீர் பகுதியில் இருந்து சரியாக 80 கிலோ மீட்டர் தொலைவில் தீவிரவாதி களின் பயிற்சி முகாம் செயல்பட்டு வந்திருக்கிறது. அதில் துப்பாக்கி சுடுவதற் கான பிரத்யேக வடிவமைப்பு, நிச்சல் குளம், ஜிம் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.
மலைப் பகுதியில் இந்த பயிற்சி முகாம் வடிவமைக்கப் பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதி அவர்கள் பதுங்கிக் கொள்வதற்கு சாதகமாக அமைந்துள்ளது. பயிற்சி முகாம் கடந்த 2003-04-ம் ஆண்டில் கட்டமைக்கப் பட்டது. ரஷ்யாவுக்கு எதிராக யுத்தம் செய்த ஆப்கன் மூத்த போர் வீர்ர்களால் இந்த பயிற்சி முகாம் அமைக்கப் பட்டிருக்கிறது.
முதலில் பாகிஸ்தான் ராணுவத்திற் காக இளைஞர் களை சேர்த்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாகத் தான் இந்த முகாம் செயல்பட்டு வந்துருக்கிறது. முகாமின் மெய்ன் ஹாலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி களுக்கு பயிற்சி அளிக்கும் இடமும், அமைப்பின் கொடியை யும் நாம் பார்க்கலாம்.
இந்த முகாமுக்கு, ஜெய்ஷ் இ முகமதுவின் கமாண்டர் மசூத் அசாரின் சகோதர்ர் முப்தி அப்துல் அமீர் தான் ஜெய்ஷ் இ முகமதுவு க்கு பொறுப்பாள ராக இருக்கிறார். அவர் ஆண்டுதோறும் நடைபெறும் அணி வகுப்பில் மட்டும் கலந்து கொள்கிறார்.
முகாமில் காணப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாட்டு கொடிகள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் தீவிரவாதிகள் சித்தரிப்பு செய்துள்ளனர். பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ.-ன் தூண்டுதலின் பேரில் பாலகோட் தீவிரவாத முகாமில் 250-க்கும் அதிகமான தீவிரவாதிகள் பயிற்சி பெற்று சென்றுள்ளனர்.
அவர் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப் பட்டிருக்கிறார். இங்கு தீவிரவாதி களுக்கு பயிற்சி அளித்தவர்கள் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத்தினர். நவீன ரக துப்பாக்கிகள், யுத்த தந்திரங்கள், வெடி குண்டுகளை தயாரிப்பது, தற்கொலைப் படை தாக்குதல், ராணுவ வாகனங்களை ஹைஜாக் செய்வது, மிக மோசமான சுற்றுச் சூழலில் தற்காத்துக் கொள்வது போன்ற மிக கடுமையான பயிற்சிகள் தீவிரவாதி களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments