ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவில் ரத்தக்கறை பேன்டேஜ் - வாடிக்கையாளர் !

0
சென்னையில் ஸ்விக்கியில் (swiggy) ஆர்டர் செய்த உணவில் ரத்தக்கறை பேன்டேஜ் இருந்ததாக ஒரு வாடிக்கையாளர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஞாயிற்றுக் கிழமை ஸ்விக்கி மூலம் சேலையூரில் உள்ள 'சாப் அன் ஸ்டிக்' என்ற உணவகத்தில் நூடுல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். 
ஸ்விக்கி - Swiggy
அதைச் சாப்பிட்டபோது, நூடுல்ஸின் உள்ளே ரத்தக்கறை படிந்த பேன்டேஜ் துணி கிடந்ததாகத் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது. `சம்பந்தப்பட்ட உணவகத்து க்குத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினேன். ஆனால், அவர்கள் சற்றும் பதற்றம் இன்றி உணவை மாற்றித் தருவதாகக் கூறினார்கள். 

பின்னர், நான் ஸ்விக்கியைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தேன். அவர்களும் சரியான பதில் கூறவில்லை. எனவே, உணவகத்தின் மீதும் ஸ்விக்கி நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கை விரல்களில் அடிபட்டவர் களை வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது’’ என்று தனது பதிவில் தெரிவித் துள்ளார் பாலமுருகன்.

இது குறித்து பாலமுருகனிடம் பேசிய போது, ``இந்தச் செயலியைத் தினமும் பயன்படுத்து பவர்களுக்கு விழிப்பு உணர்வு அளிக்கவே இந்தத் தகவலைப் பதிவு செய்தேன். இந்தச் செயலுக்கு சம்பந்தப்பட்ட உணவகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல ஸ்விக்கியும் அந்த உணவகத்துடன் தொடர்பில் இருப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

இதனால் எனக்கு எந்தவிதமான பாதிப்பும் தொற்றும் ஏற்பட வில்லை’’ என்றார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து, ஸ்விக்கி நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ``எங்கள் நிறுவனத்தின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை யுள்ளது. அந்த நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு தான் நுகர்வோரு க்குச் சுகாதாரமான, தரமான உணவுகளை வழங்கி வருகிறோம். 
உணவில் ரத்தக்கறை பேன்டேஜ்
நடந்த இந்தச் சம்பவத்துக் காக, கவலையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த உணவகத்தி னரிடம் விசாரணை நடத்தி யுள்ளோம். நுகர்வோரு க்குப் பாதுகாப்பான, மகிழ்ச்சிகரமான உணவு அனுபவத்தைக் கொடுப்போம்’’ என்று கூறி யுள்ளனர். 

உரிமையாளர் ராஜாராம் மேற்கண்ட இந்தக் குற்றச்சாட்டு குறித்து, 'சாப் அன் ஸ்டிக்' உணவகத்தின் சேலையூர் பிரிவின் உரிமையாளர் ராஜாராமிடம் பேசினோம், `எங்கள் தரப்பில்தான் தவறு நடந்தது என்பது இன்னும் உறுதி செய்யப்பட வில்லை. அதற்குள் பலர் எங்கள் நிறுவனத்தின் பெயரைக் கெடுக்கும் விதமாகத் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். 

இதனால் எங்கள் நிறுவனத்தின் பெயரும் புகழும் கெடுகிறது. இந்த நிறுவனத்துக்கு, இதே பெயரில் எங்களைப் போன்ற பல கிளைகள் இருக்கின்றன. எங்களைப் போன்று அவர்களும் பாதிக்கப் படுகிறார்கள். விசாரணையே இன்னும் முழுமையாக முடியவில்லை. எங்கள் தரப்பில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. 

அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பேக்கிங் பகுதியில் வேலை செய்த எங்கள் நிறுவன ஊழியர் களிடம் முழுமையான விசாரணை செய்து விட்டோம். அவரின் உடலில் எந்த விதமான காயங்களும் இல்லை. அதோடு, ஹேண்ட் கிளவுஸ், கேப் போடாமல் எங்கள் கிச்சனுக்குள் யாரும் போகவே முடியாது. தொழில் போட்டியால் தான் யாரோ இப்படி நடந்து கொண்டிருக்கி றார்கள். 

நாங்கள் இது குறித்து ஸ்விக்கி நிறுவனத்திடம் விளக்கம் அளித்துள்ளோம். இந்தத் தொழிலுக்கு நான் மிகவும் புதியவன். இந்தளவுக்கு தொழில் போட்டி, அரசியல் இருக்கும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்க வில்லை. நாங்கள் இதுவரை யாருடைய மனமும் புண்படாமல், தரமான உணவுகளைத் தான் வழங்கி வருகிறோம். 
நூடுல்ஸின் உள்ளே ரத்தக்கறை
எங்கள் உணவகத்துக்கு வந்தவர் களுக்கு அது நன்றாகத் தெரியும். எங்கள் தரப்பைக் கேட்காமலேயே பலர், நாங்கள் தவறு செய்து விட்டதாக செய்தியைப் பரப்புகிறார்கள். விசாரணை முடிந்து எங்கே தவறு நடந்தது எனத் தெரியும் வரை தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள்'' எனப் படபடப்பாகப் பேசி முடித்தார் ராஜாராம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings