சென்னை தீ விபத்துக்கான சிசிடிவி காட்சி !

0
டிரங்க் சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கால் டாக் நிறுவனம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், பிற்பகலில் திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டு, கார்கள் அடுத்தடுத்து பற்றி எரியத் தொடங்கின. 
சென்னை தீ விபத்து


இதனால் கரும்புகை ஏற்பட்ட துடன், கார் டயர்கள், சிலிண்டர்கள் உள்ளிட்டவை வெடிக்கத் தொடங்கின. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

நீண்ட போராட்டத் திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விவரம் தெரிய வரவில்லை. இந்நிலையில், இந்த விபத்து குறித்து தீவிரமான விசாரணை யில் இறங்கிய காவல் துறையினர், விபத்து பகுதியில் வைக்கப் பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். 

அப்போது காலி மைதானத்தின் ஒரு பகுதியில் தீ எரிந்து அப்படியே கார்களை நோக்கி தீ வருவது பதிவாகி இருந்தது. காவலாளிகள் அந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் கால தாமதமாக செயல்பட்டு வந்துள்ளனர்.

மேலும், அந்த இடத்தின் பின்பகுதியில் சிலர் குடித்து விட்டு சிகரெட்டை பற்ற வைத்து அணைக்காமல் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ள தாக தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.

அண்மையில், பெங்களூரு விமான கண்காட்சி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் அதிகமான கார்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத் தக்கது.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings