கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறைக்கான கால அவகாசம் நீட்டிப்பு !

0
கேபிள் டிவிக்கான புதிய கட்டண விதிமுறை களை அமல் படுத்துவதற் கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப் படுவதாக ட்ராய் அறிவித்துள்ளது. முன்னதாக கேபிள் டிவி ஒளிபரப்பு தொடர்பாக டிராய் நிறுவனம் புதிய கொள்கை விதிமுறையை அறிவித்தது. 
கேபிள் டிவி புதிய கட்டணம்


இதன்படி, கேபிள் டிவி வழங்கும் அனைத்து சேனல்களை பார்ப்பதற்கு பதிலாக, குறிப்பிட்ட சேனலை மட்டும் பணம் கொடுத்து பொதுமக்கள் பார்த்தால் போதும் என கூறப் பட்டிருந்தது. இந்த புதிய விதிமுறை தங்களை பாதிப்பதாக வும், இதன் மூலம் பெரிய நிறுவனங்கள் மட்டுமே பலனடைய முடியும் என்றும் கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டிடிஎச் மற்றும் கேபிள் டிவி வாடிக்கை யாளர்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் அறிமுகப் படுத்தி யுள்ளது. டிராய் உருவாக்கி யிருக்கும் பிரத்யேக வலைத் தளத்தில் 5 வழிமுறைகளை கடந்து அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். 
கேபிள் டிவி புதிய விதிமுறை


மேலும் இந்த சேவையை கொண்டு விரும்பிய சேனல் களுக்கான கட்டணங் களையும் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கட்டண அடிப்படை யில் சேனல்களை தேர்வு செய்து கொள்வதற்கான கெடுவை பிப்ரவரி 1ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட நிலையில் கூடுதல் கால அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. 

சந்தாதாரர் களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக ட்ராய் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிராய் வெளி யிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கை யாளர்களின் கோரிக்கை களை ஏற்று கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல் படுத்துவதற் கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி அவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings