கரோல் பாக் ஓட்டல் தீ விபத்தில் திருச்சி பல் டாக்டரும் பலி !

0
மத்திய டெல்லி கரோல் பாக்கில் உள்ள பிரபல ஓட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இறந்த 17 பேரில் திருச்சி டாக்டரும் ஒருவர். அவரது உடல் இன்று திருச்சி கொண்டு வரப்படுகிறது. 
திருச்சி பல் டாக்டர் பலி


டெல்லி கரோல் பாக் குருத்வாரா சாலையில், 6 மாடி கட்டிடத்தில் அர்பித் பேலஸ் என்ற பிரபல சொகுசு ஓட்டல் இயங்கி வருகிறது. சமீபத்தில் காஜியபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற் காக கேரளாவைச் சேர்ந்த 13 பேர் குடும்பமாக வந்து தங்கி யிருந்தனர். 

இதேபோல் பல இடங்களை சேர்ந்த 120க்கு மேற்பட்டோர் திருமணம், தொழில் ரீதியாக ஓரிரு நாட்களுக்கு தங்கி யிருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியான போது, மேல் தளங்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 17 பேர் பலியானார்கள். 

விபத்து ஏற்பட்ட ஓட்டலில் திருப்பூர் அம்மா பாளையம் சொர்ணபுரி லே-அவுட் பகுதியை சேர்ந்த அரவிந்த் சுகுமாரன் (43), கொங்குமெயின் ரோட்டை சேர்ந்த நந்தகுமார் (38) ஆகிய இருவர் தங்கி யிருந்தனர். அவர்களும் தீ விபத்தில் உயிரிழந்தது தெரிய வந்தது. இவர்கள் திருப்பூரில் உள்ள பிரபலமான நிறுவனத்தில் மெர்சன்டைசராக பணி புரிந்து வந்தனர்.

நிறுவனத்தின் சார்பில், வியாபாரம் தொடர்பாக வெளிநாட்டு வியாபாரிகளை சந்திப்பதற் காக டெல்லி சென்று ஓட்டலில் தங்கியிருந்த போது, தீ விபத்தில் சிக்கி பலியாகி யுள்ளனர். இது குறித்து டெல்லி போலீசார் திருப்பூரில் அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீவிபத்தில் இறந்த அரவிந்த் சுகுமாருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

மீட்பு பணி முடிந்த நிலையில் மொத்தம் 17 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப் பட்டது. மேலும் காயமடைந்த 35 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இறந்தவர்களில் மேலும் ஒருவர் திருச்சியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. 

திருச்சி வயலூர் ரோடு பகுதியை சேர்ந்த அவரது பெயர் சங்கர நாராயணன்(55).  இவர் பல் டாக்டர் ஆவார். இவர் திருச்சியில் ஒரு தனியார் மருத்துவ மனையில் பணியாற்றி வந்தார். டெல்லியில் நடைபெற்ற ஒரு மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்பதற் காக சென்ற அவர் அர்பித் பேலஸ் ஓட்டலில் தங்கி இருந்த போது தீ விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.
கரோல் பாக் ஓட்டல் தீ விபத்து


டாக்டர் சங்கர நாராயணன் பலியானது பற்றிய தகவல் நேற்றிரவு தான் திருச்சியில் உள்ள அவரது குடும்பத்தி னருக்கு கிடைத்தது. இந்த தகவலை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் அவரது வீடு அமைந்துள்ள பகுதியே சோகமானது. 

தீ விபத்தில் பலியான திருச்சி சங்கர நாராயணன், திருப்பூரை சேர்ந்த அரவிந்த் சுகுமாறன், நந்தகுமார் ஆகியோரது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற் கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. டாக்டர் சங்கர நாராயணன் உடல் இன்று திருச்சிக்கு கொண்டு வரப்படும் என எதிர் பார்க்கப் படுகிறது.

தீ விபத்தில் பலியான 17 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5லட்சம் கோர விபத்து நடந்த இடத்தை முதல்வர் கெஜ்ரிவால், நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் நேரில் பார்வை யிட்டனர். 

இறந்தவர்கள் குடும்பத்துக்கு வருத்தம் தெரிவித்த கெஜ்ரிவால், ‘விபத்துக் கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் உயிரிழந்த 17 பேர் குடும்பத்துக்கு தலா ₹5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings