நாளை பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. அதை யொட்டி கேபிள் /DTH விலைகளில் ஏற்படும் மாற்றம் தான் இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், அது மட்டு மல்லாமல் DIPP (the Department of Industrial Policy and Promotion) அனுமதிக் காகக் காத்திருக்கும் புதிய இ-காமர்ஸ் விதிமுறைகளும் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
கடந்த வருடம் டிசம்பர் 26-ம் தேதி அறிவிக்கப்பட்ட இது பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
அது என்ன வென்பது நாளை அமலுக்கு வந்தால் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களு க்குச் சென்றாலே பார்க்க முடியும்.
இதனால் அதிரடி தள்ளுபடிகள், எக்ஸ்க்ளூசிவ் மொபைல் சேல்கள் என எதை யெல்லாம் வைத்து
இந்நிறுவனங்கள் இதுவரை வாடிக்கை யாளர்களை ஈர்த்ததோ, அதை யெல்லாம் மொத்தமாகப் பார்க்க முடியாமல் போகும்.
இந்தப் புதிய விதிமுறைகளால் அமேசான் தளத்திலிருந்து கிட்டத்தட்ட 4 லட்சம் பொருள்கள் காணாமல் போகலாம் எனத் தெரிகிறது.
இது அமேசானின் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு. ஃபிளிப்கார்ட்டிலும் இதே நிலை தான்.
இந்தப் புதிய விதிமுறைகள் மூலம் எளிதாகத் தொழில் தொடங்கும் நாடுகள் என்ற உலக வங்கியின் பட்டியலில் ஏற்கெனவே 77-வது இடத்தில் இருந்த இந்தியா மேலும் சறுக்கும் எனக் கூறப்படுகிறது.
நூறு கோடிக்கும் மேலான மக்கள் வாழும் நாடு என்று ஆசையைத் தூண்டும் விதமாக இருந்தாலும் வேறுபட்ட கலாசாரம்,
மொழி, சரியில்லாத போக்குவரத்து வசதிகள், குறைவான சராசரி வருமானம் எனப் பல சிக்கல்கள் இங்கு இருக்கின்றன.
அதில் இந்தப் புதிய விதிமுறைகள் மேலும் ஒரு சிக்கலாக வந்து நிற்கின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும்
பெரிய நிறுவனங்களின் நிலை இப்படி இருக்க, இதனால் பல உள்ளூர் மற்றும் சிறு வியாபாரிகள் பலனடைவார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது.
இ-காமர்ஸ் நிறுவனங்களோ அல்லது அதன் துணை நிறுவனங்களோ, ஏதேனும் நிறுவனங்கள் அல்லது
விற்பனையாளர்களின் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருந்தால், அந்நிறுவனங் களின் பொருள்களைத் தங்கள் தளங்களில் விற்பனை செய்யக் கூடாது.
அமேசானின் சொந்த பிராண்ட் அமேசான் தொடங்கி பிராண்ட் ஸ்மார்ட்பை, மிந்த்ரா ஃபேஷன் பிராண்ட் என இந்த நிறுவனங்கள் யாவுமே அந்தந்த தாய் நிறுவனங்களின் பங்குகளைக் கொண்டவை.
இவற்றை விதிமுறைப்படி சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களின் தளத்தில் விற்க முடியாது.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் எந்தவொரு நிறுவனத் தையும், தங்கள் தளத்தில் மட்டும்தான் பொருள்களை விற்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்தக் கூடாது.
இதனால் இந்த மொபைல் அமேசான் exclusive, இது ஃப்ளிப்கார்ட் exclusive என்று விளம்பரப்படுத்த முடியாது, கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடியாது.
ஒரு நிறுவனம் தனது தயாரிப்புகளை எந்தத் தளத்தில் வேண்டு மானாலும் விற்பனை செய்யலாம். இதைத் தடுக்கும் வகையில் இனி எந்த ஒப்பந்தமும் போட முடியாது.
குறிப்பிட்ட சில நிறுவனங் களுக்கு மட்டும் கேஷ்பேக் ஆஃபர்களை அளிப்பதும், பிற நிறுவனங் களுக்கு அவற்றைத் தராமல் இருப்பதும் இனி கூடாது.
இதனால் அவ்வப்போது சில நிறுவனத் தயாரிப்புகளுக்கு தரப்படும் சிறப்பு சலுகைகளை இனி பார்க்க முடியாது.
பொருள்களின் விலையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ தலையிடக் கூடாது என்பது தான் இதில் முக்கிய மாற்றம்.
இதனால் பெரிதாக சலுகைகளை வழங்க முடியாது இந்த நிறுவனங்கள். இது போக வெறும் அந்நிய முதலீட்டில் மட்டும் இயங்கும் நிறுவனங்கள், சொந்தமாக சேமிப்புக் கிடங்குகளை வைத்திருக்க முடியாது.
அப்படி வைத்திருந்தால் அவை ஆன்லைன் மார்க்கெட் பிளேஸ் என்பதி லிருந்து, இன்வென்ட்டரி அடிப்படையிலான ஒரு சேவையாக கருதப்படும். அந்தச் சேவைக்கு இந்தியாவில் FDI அனுமதியும் இல்லை.
மேலும், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தன்னுடைய பொருள்களை 25 சதவிகிதத்துக்கும் மேலாக ஒரே இ-காமர்ஸ் தளத்தில்
விற்பனை செய்தால் அந்த இ-காமர்ஸ் நிறுவனம் சொந்தமாக இன்வென்ட்டரி வைத்து அவற்றை விற்பனை செய்வதாகக் கருதப்படும்.
எனவே, 25 சதவிகிதத் துக்கு மேல், எந்தவொரு இ-காமர்ஸ் நிறுவனமும் ஒரே நிறுவனத்திடமிருந்து பொருள்களை விற்பனை செய்ய முடியாது.
இப்படிக் கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் சிறு வியாபாரிகள் பக்கம் வாடிக்கை யாளர்கள் மீண்டும் வரத்தொடங்குவர்.
இதற்குப் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்றும் ஒருபுறம் சந்தேகிக்கப் படுகிறது.
2015-ல் அமெரிக்கா சென்று பெரும் நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தினார் மோடி.
ஆனால், தேர்தல் நெருங்கும் இந்நேரம் இந்தக் கொள்கைகள் பெரிய அளவில் எடுபடாது என்பதாலும்,
உள்ளூர் வியாபாரி களின் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ளவுமே இதைப் போன்ற திட்டங்களை அவசர அவசரமாக அரசு கொண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் வைக்கப் படுகிறது.
அதே வேளையில் மற்றொருபுறம் பிக் பஜார், மெகாமார்ட் போன்ற மொத்த ஹோல்சேல் கடைகளும் இதனால் பயனடையும் என எதிர் பார்க்கப் படுகிறது.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடிகளால் இவர்களும் பாதிப்படைந்தனர்.
மேலும், ரிலையன்ஸ் தங்கள் இ-காமர்ஸ் சேவையை விரைவில் ஆரம்பித்து தொலைத் தொடர்பு சந்தையில் செய்ததைப் போன்ற ஒரு புரட்சியை இங்கும் நிகழ்த்தலாம்.
இந்தக் கொள்கைகள் அவற்றுக்குச் சாதகமாகவே இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர் சிலர்.
Tags:
Thanks for Your Comments