புற்றுநோய் வயது வித்தியாசமின்றி பலரையும் தாக்கி வருகிறது. ஆரம்ப நிலையிலே கண்டறியப் பட்டால் மட்டுமே இந்நோயில் இருந்து விடுபட முடியும். மனித உடலில் உள்ள உயிரணுக்கள் நோய் நுண்மங்க ளாக மாறி மிகவும் வேகமாக வளர்ச்சி அடைவதே புற்று நோயாக உருவெடுக் கிறது.
இந்த புற்றுநோய் கட்டிகள் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் புடைப்பாக.. கட்டியாக தோன்றி வளர்ச்சி பெறும். இதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மெதுவாக தோன்றி வளரும். பிற உறுப்பு களுக்கு பரவாது. சம்பந்தப் பட்டவர்களு க்கு எவ்வித உடல் தளர்வையும் ஏற்படுத்தாதது.
இன்னொரு வகை மிகமிக வேகமாக வளரும். உடலை வலுவிழக்க செய்யும். ரத்தத்தின் மூலம் மற்ற உறுப்புகளு க்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.
உதாரணமாக மூக்கில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளின் அணுக்கள் உடலின் பல்வேறு பகுதிகளுக்குள் ஊடுருவி கால் நுரையீரல், கால் உள்ளிட்ட பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே உடலில் வித்தியாசமான கட்டிகள், உணவு உண்பதில் இடையூறு, அஜீரண பாதிப்பு உள்ளிட்டவை தொடர்ந்து இருந்து வந்தால் உடனடியாக இது குறித்து சோதனை செய்து கொள்வது நல்லது.
Thanks for Your Comments