அரசியல் வாதியாக, அதிரடிப் பேச்சாளராக நமக்கு அறிமுகமான நாஞ்சில் சம்பத், சினிமாவி லும் அறிமுகம் ஆகிறார். நாஞ்சில் சம்பத் நடித்த படத்தின் பெயர், `எல்.கே.ஜி'. இந்தப் படம் தொடர்பான செய்தி யாளர்கள் சந்திப்பில், இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி நாஞ்சில் சம்பத் குறித்து அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டார்.
'பல ஆண்டுக் காலம் அரசியலில் இருக்கும் நாஞ்சில் சம்பத், தன் மகனின் மருத்துவப் படிப்புக்கான ஃபீஸை கட்ட முடியாமல் கஷ்டப் படுகிறார்' என்று கூறினார். நிகழ்ச்சியில் ஆர்.ஜே. பாலாஜி பேசுகையில், "ஓட்டு போடுற சாதாரண மக்களுக்கு எல்லா அரசியல் வாதிகள் மேலேயும் கோபம், வருத்தம் இருக்கு. இதைத் தான் இந்தப் படம் பேசப் போகுது.
எந்த தைரியத்துல இப்படியொரு படம் பண்றனு கேட்டாங்க. 'முகம்மது பின் துக்ளக்', 'அமைதிப்படை' படங்களை எந்த தைரியத்தோட எடுத்தாங்களோ, அதே தைரியத்தோடு தான் எடுக்கிறேன்னு சொல்லி யிருக்கேன். இந்தப் படத்துல என் அப்பா கேரக்டர்ல நடிக்க நாஞ்சில் சம்பத் சார்கிட்ட பேசுனேன். அவர் நடிக்கிறேன்னு சொன்னதும், பரவச நிலைக்குப் போயிட்டேன்.
நாஞ்சில் சம்பத் நல்ல மனிதர். மடியில உட்காரவெச்சு சோறு ஊட்டலாம்; அப்படி ஒரு குழந்தை. ஒரே ஒரு கார் மேட்டரை வெச்சு அவருடைய நற்பெயரை டேமேஜ் பண்ணிட்டாங்க. பலரும் 'அவர் எத்தனை கட்சி மாறுறார். அவரைப் போய் நல்லவர்னு சொல்றீங் களே'னு கேட்டாங்க. அது அவருடைய கொள்கை ரீதியான விஷயம்.
முதல்ல அவரை கெட்ட அரசியல் வாதியா தான் எழுதி யிருந்தேன். அவருடன் பழக ஆரம்பிச் சதுக்குப் பிறகு, கதையில அவரின் கேரக்டரை மாத்திட்டேன். நான் பார்த்த நாஞ்சில் சம்பத் பற்றி சொல்றேன், கேளுங்க..." என்றவர், தொடர்ந்தார்.
''இந்தப் படம் தொடர் பாக நான் நன்றி தெரிவிக்க வேண்டிய மனிதர்களில் நாஞ்சில் சம்பத்தும் ஒருவர். படம் தொடர்பாக அவரிடத்தில் பேசுவதற் காக சென்னையில் உள்ள அவரின் வீட்டுக்குச் சென்றேன். பட்டினப் பாக்கம் மாநகராட்சி ஹவுசிங் போர்டில் அவருடைய வீடு இருந்தது.
மிகச் சாதாரணமாக அந்த வீடு இருந்தது. 'இந்தப் படத்துல நீங்க நடிச்சா நல்லா ருக்கும்னு ' அவரிடத்தில் கூறினேன். உடனடியாக ஒப்புக் கொண்டார். ஆனால், 'என் பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டுவியா' என்று என்னிடத்தில் கேட்ட போது அதிர்ந்து விட்டேன். 40 ஆண்டுக் காலம் அரசியல்ல இருக்கிறார்.
அவருடன் அரசியல்ல இருந்தவர் களால் இன்றைக்குப் பல்கலைக் கழகத்துக்கே உரிமை யாளராக இருக்கிறார்கள். நாஞ்சில் சம்பத் எங்கிட்ட ஒண்ணுமே இல்லைன்னு சொன்னபோது, ரொம்ப வருத்தமாக இருந்துச்சு. படத்துல அவருக்கு வில்லன் போல கேரக்டர் தான்.
ஆனால், அவர்ட்ட பேசிப் பழகினப்போ, வெள்ளந்தியா இருந்தார். இதனால, அவரோட நிஜ குணத்தை வச்சே அப்புறம் கேரக்டரை உருவாக்கி யிருக்கிறேன்'' என்றார்.
நாஞ்சில் சம்பத் தன்னுடைய மகன் படிப்புக் கான ஃபீஸ் கட்ட முடியாமல் தவிப்பது தெரிந்து, அவரைப் போனில் தொடர்பு கொண்டோம். 'சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கிறார். ஆண்டுக்கு 11 லட்சம் ஃபீஸ் கட்ட வேண்டும்' என்றார்.
'சினிமாவில் நடிக்குறீங்க, அதுல எவ்வளவு சம்பாதிச் சிருக்கீங்க' என்று கேட்ட போது, இது வரைக்கு 4.25 லட்சம் சம்பளம் வந்திருக்குது. அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிற படத்துல நடிக்கிறேன்னு' அவரிடத்தில் இருந்து பதில் வந்தது.
அப்போ, இனிமேல் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர நடிகரா மாறிடுவீங்களா? என்றால், ''அதெப்டிங்க... அரசியல் தான் எனக்கு எல்லாம். பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான முழுவீச்சா பிரசாரம் பண்ணுவேன்'' என்றார். `எல்.கே.ஜி' படத்துல உங்க ரோல் என்வென்று கேட்ட போது, '' உருப்படாத அரசியல்வாதி வேடம் தான்'' என்று அவரே சொன்னார்.
Thanks for Your Comments