முதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை !

0
ஹாலிவுட் திரைப்படம் வெளியானபின் 'பிளாக் பேந்தர்' பற்றிய பேச்சு சமீபத்தில் அதிகமாகவே உள்ளது. ஆனால், பிளாக் பேந்தர் (கருஞ் சிறுத்தை) ஒன்றை படம் பிடிப்பது என்பது அரியதொரு நிகழ்வாக ஆப்பிரிக்க காட்டில் நிகழ்ந்துள்ளது.
கருஞ்சிறுத்தை


இதனை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வில் பர்ராட் -லூக்காஸ் சாதித்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில், கறுப்பு நிற சிறுத்தையை படம் பிடிக்கப்படும் முதல் சம்பவம் இதுவென கருதப் படுகிறது.

அதிக தகவல்கள் இல்லாத இந்த விலங்கு பற்றி அடையாள முக்கியத் துவமான சில புகைப் படங்களே உள்ளன. கருஞ் சிறுத்தை (பேன்ந்தர்) பற்றிய வதந்திகளை கேட்போம். ஆனால், இதனை கறுஞ் சிறுத்தை (லெப்பேர்ட்) அல்லது கறுப்பு ஜாக்குவார் என்ற சொற்களால் கென்யாவில் அழைக்கின்றனர்.
கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை
வழிகாட்டி ஒருவரின் சொற்படி சிறுத்தையின் தடங்களை பின் தொடர்ந்த வில் பர்ராட் -லூக்காஸ், கேமரா பொறிகளை ஓரிடத்தில் அமைத்தார்.

"நீங்கள் கேமரா பொறி வைத்திருக்கும் இடத்திற்கு இந்த விலங்கு வருமா என்பது தெரியாது என்பதால், நான் நினைத்தப்படி படம் பிடிப்பது என்பது அனுமானம் தான்," என்கிறார் அவர்.

அவர்கள் பின்தொடர்ந்தது கருஞ் சிறுத்தையுடைய பாதையா, வழக்கமான சிறுத்தையின் பாதையா என்பது அவர்களுக்கே தெரியாது.
முதல் முறையாக கேமராவில் கருஞ்சிறுத்தை


"எனது நம்பிக்கையை கைவிடவில்லை. ஒரு சில நாட்டகளுக்கு பின்னர் இந்த சிறுத்தையின் படத்தை பெற முடியவில்லை. ஆனால், இந்த கருஞ் சிறுத்தையின் புகைப்படம் கிடைத்தது என்றால் நான் அதிஷ்டக்காரன் என்று எண்ண தொடங்கினேன்," என்று குறிப்பிடுகிறார் வில் பர்ராட்-லூக்காஸ்.

நான்காவது நாள் அவருக்கு அதிகஷ்டம் கிடைத்த நாளாகியது. "வழக்கமாக இத்தகைய கேமரா பொறிகளில் இருக்கின்ற விளக்கு இந்த விலங்கை தெளிவாக பார்க்க முடியும். 
முதல் முறையாக சிக்கிய கருஞ்சிறுத்தை
ஆனால், இரவு என்பதாலும், அதன் நிறம் கறுப்பு என்பதாலும் அதன் கண்கள் புகைப்படத்தில் வெறித்து பார்ப்பதை தான் என்னால் பார்க்க முடிந்த்து என்று அவர் தெரிவிக்கிறார். BBC News
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings