அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது பறக்கும் கார் !

0
நெதர்லாந்தைச் சேர்ந்த பால் – வி (Pal-V) நிறுவனம், பறக்கும் கார் தயாரிப்பில் கடந்த பத்தாண்டு களுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. 
அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது பறக்கும் கார் !
இந்நிலை யில் அடுத்த ஆண்டு முதல் பறக்கும் காரினை விற்பனைக்கு அறிமுகப் படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித் துள்ளது. 

கடந்த மார்ச் மாதம் காட்சிக்கு வைக்கப் பட்ட இந்தக் கார் பெருமளவு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத் தக்கது. தரையிலும், வானிலும் இயங்கக் கூடியதே பறக்கும் கார். 

அடிப்படையில் கார் போன்றே வடிவமைக்கப் பட்ட இதன் மேல் ராட்சத இறக்கைகள் கொடுக்கப் பட்டுள்ளன. இரண்டு பேர் பயணம் செய்யும் அளவிற்கு காரின் முன் பகுதியானது வடிவமைக்கப் பட்டுள்ளது. 

தரையி லிருந்து புறப்பட்ட பத்தாவது நிமிடத்தில் காரினை டேக் ஆப் செய்ய இயலும். இது இந்தக் காரின் முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. 
பெண்களுக்கு இடுப்பு புற்றுநோய் வரக்காரணம்  !
இதன் உருவாக்கத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக ஏராளமான தொழிநுட்ப வல்லுநர்களை பயன்படுத்தி யிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதம், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற சர்வதேச வாகனக் கண்காட்சியில் இக்கார் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அதுமுதல் பலரின் கவனத்தை ஈர்த்த பறக்கும் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவிருப்பதாக பால் – வி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன் இயக்கத் திறனைப் பொறுத்தவரை தரையிலும், ஆகாயத்திலும் வெவ்வேறு மாதிரியாக இயங்கும் அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்தக் காரில் இரண்டு விதமான எஞ்சின்கள் பொருத்தப் பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது பறக்கும் கார் !
தரையில், ஆகாயத்தில் என இரு இயக்கத் திற்கும் தனித்தனி என்ஜின்கள். EURO 95, EURO 98, E 10%  எரி பொருளாக பயன்படுத்தப் படுகிறது.

தரையில் செல்லும் போது

அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. 100 பிஎச்பி (bhp) ஆற்றலைத் தரும் என்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. 

அதிகபட்ச முடுக்குத் திறனை (0-100 kmph) 9 நொடிகளு க்குள் எட்டும் விதத்தில் இந்தக் கார் வடிவமைக்கப் பட்டுள்ளது. லிட்டருக்கு 14 கிலோ மீட்டர் மைலேஜ் தரவல்லது.
முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம்ன்னு உங்களுக்கு தெரியுமா?
எரிபொருள் டேங்க் 100 லிட்டர் கொள்ளளவு உடையதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆகாயத்தில் இயங்கும் போது 200 பிஎச்பி (bhp) ஆற்றலைக் கொடுக்கும் என்ஜின் பயன்படுத்தப்ப டுகிறது. 

கார் கிளம்பி அதிக பட்சமாக 330 மீட்டர் பயணித்த பிறகு டேக் ஆப் செய்ய இயலும். தனிநபர் பயன்பாட்டின் போது 500 கிலோ மீட்டர் களையும், இருவர் பயணிக்கும் போது 450 கிலோ மீட்டர் தூரத்தையும் கடக்கலாம். 

காரினை இல்லை விமானத்தை சராசரி வேகத்தில் இயக்கினால் ஒரு மணி நேரத்தில் என்ஜின் 26 லிட்டர் எரிபொருளை எடுத்துக் கொள்ளும்.

வேகம் அதிகரிக்க அதிகரிக்க எஞ்சின் எடுத்துக் கொள்ளும் எரிபொருளின் அளவும் அதிகரிக்கும். அதிக பட்சமாக தொடர்ந்து 4.3 மணி நேரம் வானில் இயங்க வல்லது.

விமான ஓட்டுநர் உரிமம் தேவை
அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது பறக்கும் கார் !
அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவனங்கள் இந்தக்காரினை இயக்கும் வழி முறைகளைத் தயாரித் திருக்கி றார்கள். 

அதன்படி இக்காரினை இயக்க விமான ஓட்டுநர் உரிமம் அவசியம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2019 ல் விற்பனைக்கு..

மொத்தம் 90 கார்களை மட்டும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு களமிறக்குகிறது பால் – வி நிறுவனம். இதன் அடிப்படை விலை 6,21,500 (4.41 கோடி) அமெரிக்க டாலர்கள் ஆகும். 

முதற்கட்ட விற்பனை முடிவடைந்த பிறகு லிபெர்ட்டி ஸ்போர்ட்ஸ் எடிஷன் (Liberty Sport Edition) ரக காரினை விற்பனைப் படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமும் ஒரு ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி !
அதன் விலை 2.47 கோடியாக இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் நம் வானிலும் கார்கள் பறந்து செல்லும் என நம்பலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings