எடை குறைய நடக்கவும் வேண்டாம் ஓடவும் வேண்டாம் !

0
பிரித்தானிய Loughborough பல்கலைக் கழகத்தில் உடல் நடவடிக்கை களுக்கும் ஆரோக்கி யத்திற்குமான (Physical Activity & Health) பேராசிரியர் கலாநிதி Stuart Biddle எடை குறைவதற்குச் 
செய்ய வேண்டியவை தொடர்பாக செய்த ஆய்வில் ஒரு புதிய கண்டு பிடிப்பைச் செய்துள்ளார்.

கலாநிதி Stuart Biddle இன் புதிய சுலோகம் "அசைவதை அதிகரிக்கவும், உட்காருவதைக் குறைக்கவும்" ("move more and sit less") என்பதாகும்.

நின்று கொண்டு சமையல் பாத்திரங்களை கழுவுதல், நின்று கொண்டு வீட்டுத் தோட்டத்தில் நீர் ஊற்றுதல் போன்ற சிறு வேலைகள் உடலுக்கு அதிக பயனளிக்கும் என்கிறார் அவர்.

நாளொன்றிற்கு அரை மணித்தியா லத்திற்கு ஒரு தடவை ஐந்து நிமிடங்கள் நிற்பதும் சிறிது நடப்பதும் நல்ல தேகப் பயிற்ச்சி என்கிறார் கலாநிதி Stuart Biddle. 

இப்படிப்பட்ட நிற்பதும் நடப்பதும் நடவடிக்கைகள் மூலம் மாதம் ஒன்றிற்கு 2500 கலோரிகளை எரிக்க முடியும் என்கிறார் கலாநிதி Stuart Biddle.
நல்ல உணவுப் பழக்கமும் அதிகரித்த தேகப்பயிற்சியும் மேலதிக பயன் தரும் என்பதை மறுப்பதற் கில்லை என்றாலும் அடிக்கடி நின்று கொண்டு சிறு வேலைகள் செய்வது நல்ல பயன் தரும்.

நாளொன்றிற்கு மூன்று மணி நேரம் இருக்கும் பெண்களிலும் பார்க்க நாளொன்றிற்கு ஆறு மணி நேரம் இருக்கும் பெண்கள் மாரடைப்பால் இறப்பதற்கான சாத்தியங்கள் 40% அதிகம் என்கிறார் கலாநிதி Stuart Biddle.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings