சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
அட்சய பாத்ரா தொண்டு நிறுவனம் சார்பில் திருவான்மி யூரில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 1000 மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
அதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், சமூகநல திட்டங்களை செயல் படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை யில் உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி குழந்தை களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. குழந்தைகள் ஆரோக்கிய மாக இருந்தால் தான் பாடங்களை சிறப்பாக கற்க முடியும்.
எனவே தமிழக அரசு, கொடை யாளர்கள், தன்னார் வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து, இத்திட்டத்தை சென்னை முழுவதும் செயல் படுத்துவதுடன்,
திட்டம் தமிழகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார். மேலும், நடப்பு கல்வி யாண்டிற்குள் 20ஆயிரம் குழந்தை களுக்கு காலை உணவு திட்டம் விரிவு படுத்தப்படும் எனக் கூறப் பட்டுள்ளது.
Thanks for Your Comments