இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்ட்டர், ஜம்மூ காஷ்மீர் புட்காம் பகுதியில் விழுந்துள்ள தாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த சம்பத்தை அடுத்து, 2 உடல்கள் கண்டெடுக் கப்பட்டு உள்ளதாக வும் போலீஸ் தரப்பு கூறியுள்ளது.
நேற்று அதிகாலை இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை அழித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தரப்பு எல்லைக் கட்டுப் பாட்டை மீறி பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் போர்ப் படை ஹெலிகாப்ட்டர் விழுந்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஜம்மூ, ஸ்ரீநகர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் வான் வழிப் பயணத்து க்குத் காலவரையற்ற தடை விதிக்கப் பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப் படுகிறது. பொதுப் போக்குவரத்து விமானங்களின் பயணங் களும் ரத்து செய்யப் பட்டுள்ளன.
ரஷ்ய தயாரிப்பான எம்ஐ-17 ரக போர் ஹெலிகாப்ட்டர் தான், புட்காமின் காரெண்டு கலான் கிராமத்தில் இன்று காலை 10:05 அளவில் விழுந் துள்ளது. இதை யடுத்து அந்த பகுதியைச் சுற்றி பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ராணுவ பாதுகாப்பு நடவடிக்கை களும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மேலும்
Thanks for Your Comments