மறுமணத்து க்கு இடையூறாக இருந்ததால், ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையை அடித்துக் கொன்று விட்டதாக, கைதான தாய் திடுக்கிடும் வாக்கு மூலம் அளித்திருக் கிறார். வேலூர் மாவட்டம், வாணியம் பாடியை அடுத்த நேதாஜி நகரைச் சேர்ந்த பாஸ்கரன் மகள் நளினி (24).
இவருக்கும், பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (35) என்ற கட்டட மேஸ்திரி க்கும், கடந்த ஏழு ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒன்றரை வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் இருந்தது.
சிவக்குமார், குடும்பத்துடன் பெங்களூரு வில் தங்கி யிருந்து, கட்டட வேலை செய்து வந்தார். அங்கு, சென்னையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி முரளி (24) என்பவருடன் நளினிக்கு பழக்கம் ஏற்பட்ட தாகக் கூறப்படு கிறது. இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தது.
அவர் கண்டித்தார். இதனால் கணவனைப் பிரிந்த நளினி, சமீபத்தில் பெண் குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு, வாணியம்பாடி வந்து விட்டார். வாணியம்பாடி பெருமாள் பேட்டையில் வாடகை க்குத் தனியாக வீடு எடுத்து முரளியுடன் சேர்ந்து வாழ்ந்தார்.
இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி மாலை, படுகாயங் களுடன் சுய நினைவின்றிக் கிடந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு நளினி, வாணியம்பாடி அரசு மருத்துவ மனைக்குச் சென்றார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாகக் கூறினர்.
உயிரிழந்த பெண் குழந்தையின் கன்னம் மற்றும் முதுகில் பலமாகத் தாக்கி யிருப்பதும், பற்களால் கடிக்கப் பட்டிருப்பது போன்ற அடை யாளங்கள் இருந்தன. இது பற்றி, வாணியம்பாடி டவுன் போலீஸாரு க்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர்.
சந்தேகத்தின் பேரில் தாய் நளினி மற்றும் முரளியைக் கைது செய்த போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற் கொண்டனர். அதில், இருவரும் சேர்ந்து குழந்தையைக் கொன்றதை ஒப்புக் கொண்டனர். முரளியிடம் கைப்பற்றப் பட்ட செல்போனில், ஆபாசப் படங்கள் அதிகம் இருந்தன.
குழந்தையின் தாய் நளினி கொடுத்திரு க்கும் வாக்கு மூலத்தில், ‘‘முரளியைத் திருமணம் செய்ய நினைத்தேன். கணவரிடம் விவாகரத்து கிடைக்க வில்லை. அதற்கு, என்னுடைய குழந்தை தடையாக இருந்தது. குழந்தையைக் கொன்று விடு... நாம் சென்னை சென்று விடலாம்.
அங்கு, திருமணம் செய்து கொண்டு சந்தோஷ மாக வாழலாம் என்று முரளி கூறினார். அவரும் நானும் சேர்ந்துதான் குழந்தையை அடித்துக் கொன்றோம்’’ என்று கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நளினி மற்றும் முரளியை போலீஸார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Thanks for Your Comments