புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த ஐ.ஏ. எஸ் அதிகாரி !

0
பிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத் துள்ளார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ் சாலையில் கடந்த வியாழக் கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப் பட்டனர்.

இந்தத் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தின ருக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்களும் வீரர்களின் குடும்பத்தி னருக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித் துள்ளனர்.

பிஹார் மாநிலத்தில் இருந்து கான்ஸ்டபிள் சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் ரத்தன் குமார் தாக்கூர் ஆகியோர் வீர மரண மடைந்தனர்.

இந்நிலையில் பிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான இரண்டு வீரர்களின் மகள்களைத் தத்தெடுத்துள்ளார்.


இது குறித்துப் பேசிய அவர், ''அவர்கள் இருவருக்கும் தனியாக வங்கிக் கணக்கு தொடங்கப் பட்டுள்ளது. 

மார்ச் 10-ம் தேதி வரை அளிக்கப்படும் பணம் இருவருக் கும் சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும். மக்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தனிப்பட்ட வகையில் நான், வீரர் ஒருவரின் மகளுடைய கல்விச் செலவை ஏற்கிறேன். அவரின் ஒட்டு மொத்த வாழ்க்கைக் கான செலவையும் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று இனாயத் கான் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings