சிறுநீரகம் என்பது எமது உடலின் முக்கிய சில செயற்பாடுகளை ஆற்றுகின்ற ஒரு உறுப்பாகும். எமது உடலின் கழிவுகளை அகற்றுதல், உடலின் இரத்த அழுத்தத்தை பேணுதல், உடலின் சோடியம்,
பொட்டாசியத்தின் அளவைப் பேணுதல், அமோனியா போன்ற நச்சுக் கழிவுகளை அகற்றுதல் போன்றபல முக்கியமான தொழிற் பாடுகளை புரிகின்றது..
ஒரு நபரில் சிறு நீரகத்தின் இந்த சாதாரண செயற்பாடுகள் நீண்டகால அளவில் சிறுது சிறிதாக குறைவடைந்து செல்லுமாயின் அந்நோய் நிலையை நீண்டகால சிறு நீரகக்கோளாறு என்று அழைப்பார்கள்.
அதாவது Chronic kidney disease (CKD). சிறு நீரகம் பல லட்சக்கணக் கான சிறு நீரகத்திகளைக் கொண்டு கட்டமைக்கப் பட்ட ஒரு அமைப்பாகும்.

சிறு நீரக நோய் சிறு நீரகத்தியின் வடிகட்டு வீதத்தின் அடிப்படையில் 5 வகையாகப் பிரிப்பார்கள்.
இதன் இறுதி நிலை அதாவது நிலை 5 , சிறு நீரகத்தின் முற்று முழுதான செயலிழப்பு (endstage kidney failure) என்று அழைப்பார்கள்.
இந்த நிலைக்கு சென்ற நோயாளி களுக்கே இரத்த சுத்திகரிப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். சிறு நீரகக் கோளாறின் ஆரம்ப கட்டங்களில் நோய்க்கான அறிகுறிகளை இனங்காண்பது கடினம்,
ஆனால் இறுதி நிலையில் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.
· உடல் நிறையில் குறைவு ஏற்படும்
· உணவில் விருப்பமின்மை
· கை, கால்களில் வீக்கம்
· களைப்பு/ இளைப்பு, மூச்சுத் திணறல்
· சிறு நீரில் இரத்தம்
· நித்திரைக்குழப்பம்.
இதற்கான சிகிச்சை முறைகள்
1) வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல் (தினசரி உடற்பயிற்சி செய்தல், மது மற்றும் புகைத்தலைக் கட்டுப் படுத்தல், நிறையுணவை உண்ணுதல், நிறையை கட்டுக்குள் வைத்திருத்தல்)
2) மருந்துகள் மூலம் உயர் குருதியமுக்கம், கொலஸ்ரோல் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருத்தல்.
3) இரத்தச் சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்தல்.(dialysis)
4) சிறு நீரகமாற்று சத்திர சிகிச்சை (kidney transplantation)
இரத்த ச்சுத்திகரிப்பு முறை (Hemodialysis)
இது செயற்கை முறையில் இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு முறையாகும். சிறு நீரகம் செயலிழப்பதன் காரணமாக சிறு நீரகச் செயற்பாடு பாதிப்படைந்த நோயாளர்களுக்கு இம்முறை மூலம் இரத்தம் சுத்திகரிக்கப் படுகின்றது.
இச்செயற்பாட்டின் போது இரத்தத்தை ஒரு இயந்திரத்தினுள் (dialyser) செலுத்துவார்கள்.
இச்செயற்பாட்டின் போது இரத்தத்தை ஒரு இயந்திரத்தினுள் (dialyser) செலுத்துவார்கள்.
இவ் இயந்திரம் செயற்கைச்சிறு நீரகம் போன்று தொழிற்பட்டு இரத்தத்தில் இருக்கும் யூரியா நைட்ரஜன் போன்ற
கழிவுகளை அகற்றுவதுடன் இரத்தத்தில் இருக்கும் சோடியம் பொற்றாசியம் சமநிலையையும் இது சரி செய்யும்.
இந்த இயந்திரத்தை உடலினுள் இணைப்பதற் காக நாடியையும் நாளத்தையும் இணைத்து fistula/graft ஒன்றை உருவாக்கு வார்கள் இதனூடகவே இயந்திரத்திற்கு இரத்தம் பரிமாற்றப்படும்.
இச்செயன் முறையின் போது நோயாளிக்கு எந்த வலியும் ஏற்படாது. சாதாரணமாக இச்செயன்முறை 3 அல்லது 4 மணித்தி யாலங்கள் வரை நீடிப்பதால் பொதுவாக நோயாளிகள் நித்திரைக்கு சென்று விடுவார்கள்.
ஆனால் சில நோயாளி களுக்கு குருதியமுக்கம் குறையுமாயின் தசைப் பிடிப்பு,சத்தி,தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

இவ் இரத்தச் சுத்திகரிப்பு செயன் முறைக்கு எடுக்கும் நேர அவகாசம் நோயாளியின் சிறு நீரகத்தின் தொழிற்பாட்டின் அளவு, நிறை என்பவற்றிற்கேற்ப வேறுபடும்.
இரத்தச் சுத்திகரிப்புக்கு அடுத்த படியாக சிறுநீரக நோயாளர் களுக்கு மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்புச் செயன் முறையை Peritoneal dialysis என்று அழைப்பார்கள்.
இரத்தச் சுத்திகரிப்புக்கு அடுத்த படியாக சிறுநீரக நோயாளர் களுக்கு மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்புச் செயன் முறையை Peritoneal dialysis என்று அழைப்பார்கள்.
இச்செயன் முறையின் போது ஒரு இறப்பர் குழாய் வயிற்றுப் பகுதிக்குள் (peritoneal cavity) அனுப்பப்பட்டு சுத்திகரிப்பு மேற்கொள்ளப் பட்டும்.
இது இரத்தச் சுத்திகரிப்புச் செயன்முறையை விட இலகுவானது, செலவு குறைந்தது. இச் சுத்திகரிப்புச் செயன்முறை களானது சிறு நீரக செயலிழத் தலுக்கான தற்காலிகத் தீர்வையே தரும்.
இறுதி நிலை சிறு நீரகக் கோளாறைக் கொண்டிருக்கும் நோயாளி வாழ் நாள் முழுவதும் இச்சுத்திகரிப்பு செயன் முறையில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால் அவ் நோயாளி சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ளு மிடத்து சுத்தி கரிப்பிற்கான தேவையை தவிர்த்துக் கொள்ள முடியும்.
ஆனால் அவ் நோயாளி சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ளு மிடத்து சுத்தி கரிப்பிற்கான தேவையை தவிர்த்துக் கொள்ள முடியும்.
சிறு நீரகச் செயலிழத்தல் நோய்க்கு உள்ளான நோயாளிகள் தமது உணவு தொடர்பில் முக்கிய கவனம் எடுக்க வேண்டும்.
சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை குறைக்க வேண்டும் முக்கியமாக பழங்கள் (அப்பிள், ஒரேஞ், வாழைப்பழம்..).
சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை குறைக்க வேண்டும் முக்கியமாக பழங்கள் (அப்பிள், ஒரேஞ், வாழைப்பழம்..).
உணவில் உப்புச் சேர்த்தலை முடிந்த அளவிற்கு குறைக்க வேண்டும்.பால் உணவுப் பொருட்கள் (சீஸ்,யோகட்...) உண்பதை குறைக்க வேண்டும்.
இலங்கையை பொறுத்த வரையில் Chronic kidney disease of unknown aetiology (CKDu) என்ற சிறு நீரக நோய் காணப்படு கின்றது.
வழமையாக நீண்டகால சிறு நீரக செயலிழத்தலுக்கு (CKD) உயர் குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு நோய் என்பன
முக்கிய காரணிகளாக இருந்தாலும் (CKDu) இவ்வகை சிறு நீரக செயலிழத் தலுக்கு சரியான காரணம் இன்னும் கண்டறியப் படவில்லை.
இன் நோயினால் பாதிக்கப் பட்டவர்களில் பெரும் பாலானவர்கள் அனுராதபுரம், பொலனறுவை மற்றும் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
பொதுவாக இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் நோயாளிகளின் ஆயுட்காலம் 5-10 வருடங்கள் வரை நீடிக்கப் படுகின்றது.
இருப்பினும் சிலர் 15 வருடங்கள் வரை தொடர்ச்சியான இரத்தச் சுத்திகரிப்பு முறை மூலம் உயிர் வாழ்கின்றனர்.
பொருத்தமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மற்றும் இன் நோய் நிலைக்கு பங்களிப்புச் செய்யும் உயர் குருதியமுக்கம், நீரிழிவு நோய் போன்ற வற்றை
கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருதல், நடத்தை யியலில் மாற்றத்தைக் கொண்டு வருதல் ஆகிய வற்றின் ஒருமித்த பங்களிப்பின் மூலம் நோயாளி தன் வாழ்க்கைக் காலத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.