பவர் ஆப் அட்டார்னியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் !

0
1. தன்னுடைய வேலையை வேறு ஒருவர் கொண்டு செய்து முடிப்பது அல்லது செய்வதற்கு கொடுக்கும் அதிகார பத்திரம் பவர் ஆப் அட்டார்னி ஆகும்.
ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி
2. தனக்கு பணிசுமை அதிகமாக இருந்தாலும் , அல்லது அந்த வேலையை செய்ய நேரமின்மை யாகவும் இருந்தாலும், மேற்படி வேலைகளை செய்வதற்கு பவர் ஆப் அட்டார்னி யாக ஏஜென்ட்டை வைத்து கொள்ளலாம்.
3. பவர் பத்திரங்களில் இரண்டு வகை :

ஒன்று ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி

இன்னொன்று ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி ஆகும்.

4. ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி என்பது ஒரே ஒரு வேலையை மட்டும் செய்வதற்காக கொடுக்கும் பவர் பத்திரம் ஆகும்.

5. ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வேலையை செய்வதற்கு கொடுக்கப்படும் பவர் பத்திரம் ஆகும்.
ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி

6. நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனுதாரர் தனக்கு பதிலாக வேறு ஒரு நபரை ஏஜென்ட்டாக நியமித்து பவர் கொடுப்பது . 

வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபர் தனக்கு பதிலாக சொத்தை வாங்குவதற்கு ஒரு ஏஜென்ட்டை நியமித்து பவர் கொடுப்பது போன்றவை ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி .
7. நீதிமன்றத்தில் வழக்கு போடுவதற்கு போடும் ஸ்பெசல் பவர் பத்திரம் என்பது ஒரே ஒரு வழக்குகாக தான். 

ஆனால் அது தொடர்பாக பல வேலைகள் செய்ய வேண்டி இருந்தாலும் , அது ஒரு வேலையின் தொடர் வேலை என்பதால் அது ஒரு வேலை தான்.

8. ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி உதாரணமாக சொத்தை நிர்வகிக்க வரி செலுத்தி வர, அடமானம் வைத்து கொள்ள, 

அடமான பத்திரம் எழுதி கொடுக்க வாடகை & லீசுக்கு விட, கட்டிடம் கட்ட, அப்ரூவல் வாங்க, வாடகை வசூல் செய்ய, வாடகை தாரரை காலி செய்ய, 

கோர்ட்டில் வழக்கு தொடர வக்கீல் நியமிக்க, மற்ற இதர அரசு அலுவலங்களுக்கு சொத்து சம்பந்தமான வேலைகளை செய்ய என 

அனைத்து வேலைகளுக்கும் பவர் கொடுத்து ஏஜென்ட் வைத்து கொள்ளுதல் ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி ஆகும்.
9. ஜெனரல் பவர் ஆப் அட்டார்னியில் ஒரே ஒரு ஏஜென்ட்டை மட்டும் நியமிப் பார்கள் . சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஏஜென்ட்களை நியமிக்க லாம் . அதற்கு ஆட்சேபனை ஏதும் இல்லை.

10. நியமிக்கப்படும் ஏஜென்ட்கள், சேர்ந்தே கையெழுத்து இட வேண்டுமா அல்லது தனி தனியாக கையெழுத்து இட்டு வேலைகளை செய்ய வேண்டுமா என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

11. எதுவுமே குறிப்பிடாமல் இரண்டு நபருக்கு பவர் கொடுத்தால் இரண்டு பேருமே சேர்ந்தே அந்த வேலையை செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். 
ஆவணங் களில் இரு நபருமே கையெழுத்து இட வேண்டிய நிலை இருக்கும்

12. ஒருவரை ஏஜென்ட்டாக நியமித்து அவரை நீக்கமும் செய்யலாம், அதற்கு தனியாக பவர் ரத்து பத்திரம் ஒன்று எழுதி பத்திர அலுவலக த்தில் பதிய வேண்டும்.

13. ஒரு ஏஜென்ட்டை நியமித்து அவரை நீக்கும் வரை அந்த ஏஜென்ட் செய்த எல்லா வேலைகளும் பவர் கொடுத்தவரை கட்டு படுத்தும். 

ஏஜென்ட் செய்த வேலைகள் எல்லாம் சட்டப்படி பவர் கொடுத்தவர் செய்த வேலை களாகவே கருதபட வேண்டும்.

14. ஒரு ஏஜென்ட்டை நியமித்து விட்டு, அந்த ஏஜென்ட்டை நீக்கமால் பவர் எழுதி கொடுத்தவர் இறந்து விட்டாலோ, மனநிலை பாதிக்கபட்டலோ, அந்த பவர் பத்திரம் செல்லாதாகி விடும்.
15. ஒரு பவர் பத்திரத்தில் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்கு பவரிடமிருந்து எந்த பணமும் வாங்க வில்லை 

என்ற உறுதி மொழியும் எழுதி இருக்க வேண்டும். பவர் பத்திரத்தில் பணபரி மாற்றம் நடைபெறுதல் காட்டக் கூடாது.

16. பணபரி மாற்றம் நடைபெற்றதை காட்டினால் அதற்கு ஏற்ற முத்திரைதாள் & பதிவு கட்டணம் கட்ட வேண்டும். 
அதனை பவர் கொடுத்த வரால் ரத்து செய்ய முடியாது. அதனை  IRREVOCABLE POWER OF ATTORNEY” என்று கூறுவர்.

17. ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி பத்திரம் சொத்து கிரையம் சம்பந்தம் இல்லாத வேலைகளுக்கு அதிகாரம் கொடுக்க லாம். 

அதனை பத்திர அலுவலக த்தில் பதிவும் செய்யலாம் அல்லது நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரிடம் அத்தாட்சி பெற்று பவர் எழுதி கொடுக்கலாம்.

18. ஜெனரல் பவர் ஆப் அட்டார்னிக்கு சொத்து கிரையம் செய்யும் அதிகாரம் நிச்சயம் இருக்கும் . எனவே பத்திர பதிவு அலுவலக த்தில் தான் கட்டாயம் பதிய வேண்டும்.
பவர் ஆப் அட்டார்னி
19. ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி எழுதி கொடுப்பவர் எழுதி கொடுத்த தேதியில் இருந்து 3௦ நாட்கள் வரை தான் எழுதி கொடுத்தவர் உயிருடன் உள்ளார் என்று பதிவு அலுவலகம் ஒத்து கொள்ளும்.

20. அதற்கு பிறகு ஒவ்வொரு 3௦ நாட்களு க்கும் எழுதி வாங்கிய ஏஜென்ட் ஏதாவது காரியம் செய்ய வேண்டும் என்றால் 

பவர் எழுதி கொடுத்தவர் உயிருடன் உள்ளார் என்று அரசு மருத்துவரிடம் இருந்து லைப் சர்டிபிகேட் வாங்கி பதிவு அலுவலக த்தில் கொடுக்க வேண்டும்.

21. சொத்துக் களை பவர் ஹோல்டரிடம் இருந்து வாங்கும் போது கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

22. ஸ்பெசல் பவர் ரூ.2௦ பொது பவர் ரூ.1௦௦ , பணம் வாங்கிய பவர் & கொடுத்த தொகைக்கு 4% என முத்திரைதாள் வாங்க வேண்டும்.

23. சொத்தின் விற்பனை இல்லாத பவர் பத்திரத்திற்கு பதிவு கட்டணம் ரூ. 15௦ சொத்தின் விற்பனை உள்ள பவருக்கு பதிவு கட்டணம் ரூ.1௦,௦௦௦, 

பணம் வாங்கி கொண்டு எழுதி கொடுத்த பவர் பத்திரத்திற்கு கொடுத்த தொகையில் 1% பதிவு கட்டணம் ஆகும்.
24. முத்திரைதாள் செலவுகளை மிச்சம் செய்வதற்காக பணம் வாங்கி கொண்டு, பவர் பத்திரத்தில் பணம் வாங்கவில்லை என்று எழுதி கொள்வது நடைமுறை வழக்கம்., 

அப்பொழுது பணபற்று ரசீது தனியாக ஒரு பத்திரம் மூலம் எழுதி கொள்வர் .
25. பவர் பத்திரம் மற்றும் பணபற்று ரசீதும் ஒரே தேதியிலோ அல்லது அதற்கு மறுநாளோ இருந்தால் சட்டம் அதனை கிரையம் என்றே கருதுகிறது. 

பணம் பெற்றவர் பின்னாளில் பவர் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது , அதனை ரத்து செய்யும் அதிகாரம் குறைவாக உள்ளது என நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளது.

26. பவர் எழுதி கொடுக்கும் நபர், நல்ல நபர்களை ஏஜென்ட்டாக வைக்கவில்லை என்றால், பவர் கொடுக்கும் நபர் பெயரில் பணமோ அல்லது நிலமோ மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings